சீமானுக்கும் காரைக்குடிக்கும் என்ன தொடர்பு: காங்கிரஸ் எம்.பி., கார்த்தி கேள்வி
காரைக்குடி: ''நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், காரைக்குடிக்கும் என்ன சம்பந்தம்? காரைக்குடிக்கு வெளியூர் வேட்பாளர் தேவை இல்லை,'' என காங்கிரஸ் எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடும் நிலையில், அது குறித்து கார்த்தி அளித்த பேட்டி:
'விஜய் ரசிகர் மன்றம்' என்பது அரசியல் களத்தில் இன்னும் சோதிக்கப்படாத ஒன்று. அவர்களுக்கு எந்த அரசியல் பின்னணி என தெரியவில்லை.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தான், அவர்களின் ஓட்டு சதவீதம் என்ன; யார் ஓட்டுகளை பிரிக்கின்றனர் என்பது தெரிய வரும். செய்தியாளர்கள் சந்திப்பு, அறிவார்ந்த விவாதங்களில் பங்கேற்று, தன் சமுதாயப் பார்வையை விஜய் வெளிப்படுத்த வேண்டும்.
சீமானுக்கும், காரைக்குடிக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தமும் இல்லை. அவர் இங்கே வந்தால் ஹோட்டலில் தான் தங்க வேண்டும்.
சீமானின் மாமனார் காளிமுத்து கடந்த 1998ல் இங்கு போட்டியிட்டபோது, 'ஜெயித்தாலும் தோற்றாலும் சிவகங்கைக்கு வருவேன்' என்றார்; ஆனால், வரவில்லை. நா.த.க.,வில் ஒவ்வொரு முறையும், தொகுதிக்கு தொடர்பு இல்லாத புதிய வேட்பாளர்களையே நிறுத்துகின்றனர்.
அதே நேரத்தில், கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் போட்டியிடுகிறார் என்றால், வயநாட்டில் வேட்பாளராக நிறுத்த வலுவான யாரும் உள்ளூரில் இல்லை. காரைக்குடி தொகுதியில் எங்களுக்கு வலுவான வேட்பாளர் இருக்கிறார். எனவே, வெளி ஆட்கள் எங்களுக்கு தேவையில்லை. இவ்வாறு கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்