பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் எவை? சென்னையில் 2வது நாளாக ஆலோசனை
சென்னை: சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.,வுக்கு, 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்பது குறித்து, சென்னையில் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இன்று முதல் பிரசாரத்தை துவக்குவதால், விரைவாக, விருப்ப தொகுதி பட்டியலை வழங்குங்கள்' என, பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இதையடுத்து, நேற்று இரண்டாவது நாளாக, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மூத்த நிர்வாகிகளுடன், பீயூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.
இதில் பங்கேற்ற தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறுகையில், “கடந்த சில தினங்களாக கோவையில் இருந்தேன். சில விஷயங்கள் பேச, பீயூஷ் கோயல், என்னை வரச் சொல்லி இருந்தார். ' 'என் வேலை முடிந்து விட்டது. நான் மீண்டும் கோவை கிளம்புகிறேன். யாரிடமும் 'சீட்' கேட்கவில்லை. என் வேலையை, ஒரு தொண்டனாக செய்து கொண்டிருக்கிறேன்,” என்றார்.
இதற்கிடையே, பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் ஒன்றை, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒதுக்க உள்ளதாக கூறப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாறன் தெரிவித்துள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்