Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 புதிய பஸ் நிலையத்தை கட்டியது யார்? எம்.எல்.ஏ.,வுக்கு வி.சி., வேட்பாளர் கேள்வி

 புதிய பஸ் நிலையத்தை கட்டியது யார்? எம்.எல்.ஏ.,வுக்கு வி.சி., வேட்பாளர் கேள்வி

திண்டிவனம்: 'புதிய பஸ் நிலையத்தை தான் கட்டியதாக அர்ஜூனன் எம்.எல்.ஏ., பொய்யான தகவலை மக்களிடம் கூறி வருகிறார்' என திண்டிவனம் தொகுதி வி.சி., வேட்பாளர் வன்னி அரசு பேசினார்.

காவேரிப்பாக்கம், சேடன்குட்டை, உதயா நகர் உட்பட பல்வேறு பகுதிளில் அவர் பானை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து பேசுகையில், 'திண்டிவனம் தொகுதியில் அர்ஜூனன் எம்.எல்.ஏ., மக்களை சந்திக்கவில்லை. வெள்ள பெருக்கு போன்ற இக்கட்டமான காலங்களில்கூட எட்டிப் பார்க்கவில்லை.

அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தை அவர் பயன்படுத்தவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்டால், கலெக்டரிடம் புதிய அலுவலகம் கட்டித்தர கேட்டோம் என கூறுகிறார்.

இருக்கும் அலுவலகத்தை பயன்படுத்த முடியவில்லை. புதிய அலுவலகம் கட்டித்தர கேட்கிறார். தி.மு.க., ஆட்சியில் திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள நகராட்சி பஸ் நிலையத்தை அவர் கட்டியதாக பொய்யான தகவலை மக்களிடம் கூறி வருகிறார்' என்றார்.

தொகுதி பொறுப்பாளர் ரமணன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், பாபு, மயிலம் முன்னாள் சேர்மன் வசந்தா, 24வது வார்டு கவுன்சிலர் ராம்குமார், நகர துணை செயலாளர் கவுதமன், தே.மு.தி.க.., நகர செயலாளர் காதார்பாஷா, வி.சி., மண்டல பொறுப்பாளர் திலீபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement