யாருக்காக குறுக்குச்சால் ஓட்டுகிறார் சசிகலா?
நமது சிறப்பு நிருபர்
சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை அறிவித்துள்ள சசிகலா, தென்னந்தோப்பு சின்னத்தில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
அண்மையில் தான் புதிதாக கட்சி தொடங்கி இருப்பதாக கட்சி கொடியை சசிகலா அறிமுகம் செய்து இருந்தார். இந்நிலையில் இன்று அவர் சென்னை போயஸ் கார்டனில் நிருபர்களை சந்தித்து கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அறிவித்தார்.
கட்சியின் பெயர்- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம்
கட்சியின் சின்னம்- தென்னந்தோப்பு
கட்சியின் பெயர், சின்னத்தை அறிவித்த சசிகலா, வரும் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் எனவும் அறிவித்துள்ளார்.
தனிமரம் தோப்பாகாது!
நிருபர்களிடம் சசிகலா கூறியதாவது: தொண்டர் ஆரம்பித்த கட்சியில் நான் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன். தமிழக மக்களை திமுக கசக்கிப் பிழிந்து கொண்டு இருக்கிறது.இதையெல்லாம் பார்த்த நான், இதற்கு ஒரு முடிவு கட்டும் எண்ணத்தில் புதிய கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தேன். தனிமரம் தோப்பாகாது. தனிமரமாக வரவில்லை தோப்பாக வந்துள்ளோம்.
நாங்கள் மக்களோடு இருக்கிறோம் என்பதற்கு எங்களுக்கு கிடைத்துள்ள தென்னந்தோப்பு சின்னமே சான்று. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் எனது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். தனிமரம் தோப்பு ஆகாது, கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு சசிகலா கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்