Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தவெக பொருளாளர் மீது மனைவி புகார்: குழந்தையை மீட்டுத்தர கோரிக்கை

தவெக பொருளாளர்  மீது மனைவி புகார்: குழந்தையை மீட்டுத்தர கோரிக்கை

சென்னை: தவெக பொருளாளர் வெங்கட்ராமன், குழந்தையை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட்டதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை துவக்கி தமிழகத்தில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறார். அக்கட்சியின் பொருளாளர் ஆக வெங்கட்ராமன் என்பவர் உள்ளார். தற்போது அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது மனைவி மீனாட்சி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்து வாழ்ந்து வந்தோம். நீதிமன்றம் சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், வெங்கட்ராமன் என்னுடன் வாழாமல் தனித்து வாழ்கிறார். மேலும், 9 வயதான குழந்தையை என்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டார். குழந்தையை ஒப்படைக்காமல் மிரட்டுவதுடன், என்னிடம் காட்டாமல் சட்ட விரோதமாக அவரது பாதுகாப்பில் அடைத்து வைத்துள்ளார். குழந்தையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement