'என் கூடவே வர வேண்டும்': விஜயால் நிர்வாகிகள் கடுப்பு
விஜய் எங்கு சென்றாலும் அழைப்பதால், தேர்தல் பிரசாரம் செய்ய முடியாமல், முன்னணி நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.
த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி தலைவர் விஜய், சென்னை பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் வேட்புமனுவை தாக்கல் செய்து, விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பிரசாரம் செய்யும் விஜய், அடுத்தபடியாக, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.
தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம், முன்னணி நிர்வாகிகள் கட்டாயம் வர வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது: த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், தி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு, அவர் புதியவர் என்பதால் தீவிர பிரசாரம் செய் ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோல், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார் வெற்றி பெற, தெருத்தெருவாக பிரசாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக,கோபிசெட்டிபாளையத் திற்கு செங்கோட்டையன் புதியவரல்ல என்றாலும், அவரை தோற்கடிக்க அ.தி.மு.க., தீவிர பிரசாரம் செய்து வருகிறது. எனவே, விஜயை தவிர முன்னணி நிர்வாகிகள் அனைவரும், தொகுதிக்குள் இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
ஆனால், தனது பிரசாரத்துக்கு அனுமதி வாங்குவதில் இருந்து, பிரசாரம் செய்யும் வரை, முன்னணி நிர்வாகிகள் கட்டாயம் தன்னுடன் இருக்க வேண்டும் என, விஜய் கட்டளையிடுகிறார்.
அவர்கள் உடன் இருந்தால்தான், பிரச்னை வந்தால் சமாளிக்க முடியும் என்றும், பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் உணர்கிறார். அவரின் பேச்சை நிர்வாகிகளால் தட்ட முடியவில்லை. தர்மசங்கடத்தில் அவருடன் சென்று வருகின்றனர்.
முன்னணி நிர்வாகிகளுக்கு இந்த பிரச்னை என்றால், அடுத்தகட்ட வேட்பாளர்களும் அச்சத்திலேயே உள்ளனர். அதாவது, த.வெ.க., வேட்பாளர்கள் பலருக்கும், தொகுதிக்குள் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை.
விஜய் முகத்தை வைத்துதான், ஓட்டு வாங்க வேண்டும். அதனால்தான், 'நான் வேறு இல்லை; வேட்பாளர்கள் வேறு இல்லை' என விஜய் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால், கொளத்துாரில் பிரசாரம் செய்த விஜய், வேட்பாளர் பெயரையே தவறாக சொல்லி விட்டார். மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்த விஜய், அம்மாவட்டத்தில் உள்ள இதர தொகுதி வேட்பாளர்களின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.
போதாக்குறைக்கு, 106 வேட்பாளர்கள், வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு த.வெ.க.,வினர் தேர்தல் பணிகளை செய்ய மறுக்கின்றனர். அவர்களை சமாதானம் செய்யக்கூட, கட்சி உயர்மட்டத்தில் ஆள் இல்லை.
மேலும், விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் தொடருவதால், பல மாவட்டங்களுக்கு அவர் செல்வதே கேள்விக்குறியாகி உள்ளது. விஜய் பிரசாரம் செய்ய வரவில்லை என்றால், 'அவுட்' ஆகி விடுவோம் என்ற பீதியில் தான் பல வேட்பாளர்கள் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
இவர் பிரச்சாரத்துக்கு கிளம்புகிறார் என்றால் கூடவே எமதர்மனின் பாசக்கயிறையும் உடன் எடுத்து செல்லுகிறாரோ என்று என்ன தோன்றுகிறது .
விஜயை பார்த்து ரெண்டு திராவிட கட்சிகளுக்கும் பயம். அதனால்தான் தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட அனுமதி கொடுக்க முட்டுக்கட்டை போடுகிறார்கள். இளைஞர்கள் இளம்பெண்கள் வாக்கு தலித் சிறுபான்மையினரில் ஒரு பகுதியினர் வடக்கு மேற்கு மற்றும் தெற்கில் பரவலாக இருக்கின்றனர். அதனால்தான் விஜய் பற்றி சின்ன விஷயத்தை கூட பெரிதாகி காட்டுகின்றனர். காங்கிராஸ் பிஜேபியிலும் கோஷ்டி பூசல் பெரிதாகவே தெரிகின்றது. அதை பற்றி எந்த செய்தியும் பெரிதாக வரவில்லை. இதைவைத்து நான் த வெ க ஆதரவாளன் என்று நினைத்துக்கொள்ளுங்கள். என்னை பொறுத்தவரை பத்திரிகைகள் நடுநிலைமையோடு செய்தி தரவேண்டும். அதுதான் நல்ல ஆட்சியாளர்களை மக்களுக்கு பெற்றுத்தரும்.
It seems very big cyber criminal wanted by GST authorities coning in in vijay party. Lottery recommendation in vellore district and innocent tvk members please be alert. Election commission should reject this person and handover to GST and enforcement team
புதியதாக அரசியல் கட்சி தொடங்கிய ஒரு கட்சியின் தலைவன்... 234 தொகுதிகளில் போட்டியிடும் தன் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்துதான் ஆக வேண்டும்.. ஆனால், தேர்தல் பிரச்சாரம் செய்திட இருப்பதோ... 17 நாட்கள்... அட்லீஸ்ட் ஒரு பத்து தொகுதிக்கு பத்து வேட்பாளர்களை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தி ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டுமெனன்றாலும்... 23 நாட்கள் வேண்டும்... அரசியல் தலைவனுக்கான ஒரு சிறு தகுதிகூட இல்லாதவன்... ஆனானப்பட்ட ஸ்டாலின், எடப்பாடி போன்ற ஜாம்பவான்களே... ஊர் ஊராக.. தெரு தெருவாக.. ரோடு ரோடாக அலைந்து திரிந்து தன் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரத்தை துவங்கிவிட்டனர்.. இவன் என்னடான்னா... பெரம்பூரில் மனுதாக்கல் செய்துவிட்டு... பெரம்பூரில் ஒரு இடத்திலும், பெரம்பூரில் இருந்து அடுத்த தெருவான கொளத்தூரில் ஒரு இடத்திலும் வேனில் நின்று பேசிவிட்டு ஓடிப் போய் பனையூர் பங்களாவில் ஓய்வு எடுத்துவிட்டு... நேற்று திருச்சியில் மனு தாக்கல் செய்தவிட்டு... அங்கே ஒரு பிரச்சாரம் செய்துட்டு இன்னைக்கு பனையூரில் ஓய்வு எடுக்கிறார்.. இதெல்லாம் அரசியலுக்கு... அதுவும் தேர்தல் நேர அரசியலுக்கு ஒத்து வருமா...? இவன் பின்னாடி சுத்துற சில்லுண்டி கோலி விளையாடுற சின்ன பசங்கதான், எங்க விஜய்...னு கூவிகிட்ட இருக்கானுங்க.. அவனுங்க சாவுற வரைக்கும் இப்படியே கூவிகிட்டே இருக்கணும்.. இவர் தேர்தல் தோல்வியை தாங்க முடியாமல்... மீண்டும் சினிமாவில் நடிக்க ஓடிப்போய்விடுவான்... இவரை நம்பி கூவுன சின்னப்பசங்கதான் நடுரோட்ல நிப்பானுங்க..? அதுமட்டுமல்ல... நேத்து தெரியாத்தனமா திமுக... பாஜக...ன்னு பாஜக பேரை முதன்முறையா சொல்லி இருக்கார்... அவ்ளோதான்... “அவன நீ தொட்ட...நீ கெட்ட”...ங்ற மாதிரி... இனிமேதான் பாஜக... தன் வேலையை காட்டும்...? பாருங்க, மெயின் பிக்சர் போடும்போது பாஜக யாருன்னு காட்டுவாங்க...?
திருச்சியிலும் ஒரு சம்பவம் செய்துவிட்டு தான் வந்துள்ளார் தலைமை தற்குறி. கூட வந்த ஆதவ் அர்ஜுனன் ரெட்டி கார் போலீஸ்காரர் காலை அடுத்து விபத்து. போலீஸ்காரர் மருத்துவமனையில் அனுமதி. தினசரி எதாவது ஒரு எதிர்மறை செய்தி இவர்கள் குறித்து வராவிட்டால் தான் ஆச்சர்யம். சொல்லி வைத்தது போல இந்த கும்பலால் மட்டுமே நடந்துகொள்ள முடியும்.
சினிமாவில் மட்டும் இடது கையால் 100 பேரை அடிப்பார். இவர் 2 தொகுதியில் போட்டியிடும்போதே தெரிந்துவிட்டது ஒரு தற்குரியன்று..
இது ஒரு வகை மனோவியாதியின் மற்றும் கொடூர நம்பிக்கையின்மையின் பிரதிபலிப்பு. கேரவன் கலாச்சாரத்தை அரசியலில் நுழைக்கும் குயுக்தி. அந்த அந்த மாவட்ட தலைவர்கள் புடைசூழ பிரச்சாரத்துக்கு செல்வது தான் எல்லோரும் செய்யும் அரசியல். மாநில அளவிலான இரண்டாம் கட்ட தலைவர்களை மாவட்ட அளவில் இழுத்துச்சென்றால் அந்த கட்சியின் கட்டமைப்பு எப்படி வளரும் என்ற அடிப்படை தெரியாதவர்கள் எல்லாம் நாட்டை ஆள நினைப்பது தமிழகத்தின் சாபக்கேடு. இப்படிப்பட்ட ஆட்களை தமிழக அரசியல் களத்தில் வலிந்து இழுத்து விட்டவர்கள் தமிழகத்தை சீர்கெடுக்க போட்ட நீண்ட கால திட்டம் இது. இதை முளையிலேயே வேரோடு சாய்த்திடவேண்டும். திரும்ப வலுக்கட்டாயமாக நட மேலிடம் நினைத்தாலும் இவர்களால் வாழ்நாளில் எழும்பவே முடியாத வகையில் ஒரு மாபெரும் தோல்வியை பரிசளித்திடவேண்டும்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய எவருக்கும் இந்தத் தேர்தல் கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும். இனி அரசியலில் ஈடுபடவோ அல்லது இந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காணவோ கூடாது என்பதற்கு இது அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு இந்த நடிகர் மீண்டும் நடிக்கச் செல்வார், மேலும் அவர்களின் இரண்டாம் நிலை ஆட்கள், ஏதேனும் இருந்தால், தங்களின் முந்தைய தொழில்களைத் தொடர்வார்கள். சமூக ஊடகங்கள்/தொலைபேசி அழைப்புகளில் அவர்கள் செய்யும் அனைத்து வசவுகளையும் நமது சைபர் குற்றப் பிரிவு கண்காணிப்பதால், அவரது ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஒரு முக்கியப் பிரச்சினை உள்ளது. அவர்கள் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும், மேலும் அவர்களின் பிரச்சினைகளிலிருந்து வெளிவர அவர்களின் கட்சியைச் சேர்ந்த எவரும் அவர்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள்.
இந்த நடிகரும் அரசியல்வாதியுமானவர் 10/12 ஆம் வகுப்பை முடித்தாரா இல்லையா என்பதும், அவர்களின் இரண்டாம் நிலை/மாவட்ட அளவிலான தலைவர்களில் பெரும்பாலோர் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்களா இல்லையா என்பதும் எனக்குத் தெரியாது. இந்த ஆட்கள் சட்டமன்ற உறுப்பினர்/நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களாக விரும்புகிறார்கள். தமிழ்நாட்டிற்கு இது என்னவொரு கதி/அவமானம். அதிகாரப்பூர்வ ஆவணங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை இந்த ஆட்கள் புரிந்துகொள்கிறார்களா இல்லையா?
இந்த வெறித்தனமான ஆதரவாளர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்: நீங்கள் மாறாத வரை அல்லது சரியாகச் சிந்திக்காத வரை எதுவும் மாறாது.

தெருத்தெருவாக சுற்றினாலும் மரியாதை கூட உங்களுக்கு கிடைக்காது