Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


என்னை தொட்டதற்கு வருத்தப்படுவீர்கள்: சொன்னதை செய்து காட்டிய விஜய்

என்னை தொட்டதற்கு வருத்தப்படுவீர்கள்: சொன்னதை செய்து காட்டிய விஜய்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய், தான் பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டங்களிலும், பிரசாரங்களிலும், 'தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் இடையில்தான் போட்டி' என, ஆணித்தரமாக கூறி வந்தார்.

கரூரில் அவரது பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் உட்பட, 41 பேர் இறந்தனர். இதனால், ஒரு மாதமாக, தனது வீட்டில் இருந்து வெளியே வராமல், துக்கத்தில் முடங்கினார்.

தி.மு.க.,வினர் செய்த சதி செயல் காரணமாக, கரூர் சம்பவம் நடந்ததாக, த.வெ.க., தரப்பில் புகார் கூறப்பட்டது. சி.பி.ஐ., விசாரணையில் ஆஜரானபோது, விஜய், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர், இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு பின், முதல்வர் ஸ்டாலினுக்கு, விஜய் நேரடியாக சவால் விட்டார். 'விஜயை ஏன் தொட்டோம் என, தேர்தலுக்கு பின் வருத்தப்படுவீர்கள்' எனக் கூறி வந்தார்.

அதை நிரூபிக்கும் வகையில், இத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை விஜய் பெற்றுள்ளார். ஆளும் கட்சியாக இருந்த, தி.மு.க., தோல்வி அடைந்தது. 'தி.மு.க., 2.0' எனக் கூறி வந்த, முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட, கொளத்துார் தொகுதியில், படு தோல்வி அடைந்தார்.

விஜய் தனது சவாலில் வென்று விட்டார் என, த.வெ.க.,வினர் பெருமிதம் அடைந்து உள்ளனர்.

Advertisement

மே 05, 2026 04:27 pm

தன் மீதான அத்தனை பழிகளையும் சுமந்து , தனக்கென குடும்பம் ஏதும் இல்லாமல் , விஜய்க்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் செலவழித்து ...

உள்ளே அழுது வெளியே சிரித்து இந்த தமிழ்நாட்டுக்கு தன்னலமற்ற தலைவனொருவன் வேண்டுமென டெல்லிவரை பயணப்பட்டு

இந்த வெற்றியின் மூலகாரனமாக இருந்த தியாகத்தலைவி ,புரட்சித்தாரகை திரிஷா அவர்களை திருச்சியில் வெற்றிபெற செய்து அமைச்சரவையில இடம்பெறச்செய்வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
ஆரம்பிச்சுட்டானுங்க ஐயா

Reply Rate this
மே 05, 2026 04:26 pm

விஜய் தன் ரசிகர்களை விசில்தான் அடிக்கச் சொன்னார். அவர்கள் திருட்டு திராவிடக்கட்சிகளுக்கு சங்கே ஊதிவிட்டார்கள்

Reply Rate this
மே 05, 2026 01:07 pm

இங்கு கருத்து சொன்னவர்கள் விஜய்க்கு ஆதரவாக இருப்போம் என சொல்லாமல் அவர் தோல்வியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திமுக, அதிமுக அனுதாபிகள் மற்றும் ஆதரவாளர்கள். திமுக, அதிமுகவின் தோல்வியை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு அரசை நன்கு வழி நடத்தி செல்லுபவர்கள் திறமையான, நேர்மையான மக்கள் நலன் விரும்பும் அதிகாரிகள் உடனிருந்தால் எதுவும் சாத்தியம் ஆகும். கள்ள சாராயம், பெண்கள் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்கள் , கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் இல்லாத அமைதியான மாநிலமாக மாற்றி காட்ட விஜய் அவர்களை வாழ்த்துவோம்.

Reply Rate this
மே 05, 2026 12:09 pm

மன்னிக்கவும். செய்து காட்டியவர்கள் மக்கள். இவர் ஒன்றுமே செய்யவில்லை. ஆனாலும் வெற்றி பெற்று விட்டார். தமிழகத்தின் முதல்வர் பதவி ஜஸ்ட் லைக் தட் இவரிடம் வந்து சேர்ந்து இருக்கிறது. இனி இவர் எப்படி செயல் படுவார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. நல்லது நடந்தால் சரிதான்.

Reply Rate this
மே 05, 2026 11:59 am

திராவிட இயக்கத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை என்பது தெளிவு. மாற்று தேடி அலைந்தனர். ரஜினி அரசியலில் ஈடுபட்டு இருந்தால் அலை வீசி இருக்கும். அண்ணாமலை முதன்மை படுத்தி இருந்தால் வெற்றி மாறி இருக்கும். திமுக ஆட்சியில் எப்போதும் மக்கள் விரோத குழுக்கள் பயமின்றி நடமாட்டம். மக்களின் நேர்மையான கோரிக்கை நிர்வாக, நீதிமன்றத்தில் செயல் இழப்பு. மக்கள் மாற்றம் காண தேடியபோது விஜய் தென்பட்டார். மாநிலம் முழுவதும் அறிமுகம் இல்லாத உறுப்பினர்கள் வெற்றி. இதற்கு தேர்தல் ஆணையம் தான் முக்கிய காரணம். காமராஜ் போல் ஊழல் செய்யாமல் சாதி, மத, நிர்வாக பிரச்சனை உள் கட்சி செல்லாமல் இருந்தால் மக்கள் ஆதரவு போதும்.

Reply Rate this

யார் ஜெயிக்க வேண்டும் என்பதை விட யார் தோற்க்க வேண்டும் என்று நினைத்தோமோ அது நடந்தது. திமுக இனி தானாக அழியும். காங்கிரஸ் TVK கூட்டணி அமையாமல் தடுத்த திமுக தண்டிக்கப்படும். செல்வபெருந்தகை தூக்கி எறிய படுவார். திமுகவின் அல்லக்கை கட்சிகளும் மாறி விடுவார்கள்

Reply Rate this
மே 05, 2026 10:31 am

முதலில் ஆட்சி அமையுங்கள். ஊழலோடுதான் ஆட்சியை அமைப்பீர்கள். மீதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எங்க போவீர்கள் எப்படி வாங்குவீர்கள் பணம் ஹானி. அதுவே ஊழல் தானே.

Reply Rate this
மே 05, 2026 10:20 am

எதிரிகளே வே‌ண்டா‌ம். தானாகவே அழிவார் தற்குறி

Reply Rate this
மே 05, 2026 10:09 am

இது மட்டுமா? இனி அண்ணியார் உள்துறை அமைச்சரானால்...

Reply Rate this
மே 05, 2026 09:42 am

In due course people of the state will feel sorry for voting U to power.

Reply Rate this