/ கிசுகிசு / கவுரவம் போன தலை

கவுரவம் போன தலை

மாம்பழ கட்சியின் அப்பா தலைவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கியதும், மாம்பழத்து ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். பின், அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றினர். அப்போது, அவரை எதிர்நோக்கி காத்திருந்த இளைய பெண் வாரிசு கவிதமானவர், அப்பாவுடன் கவுரவ தலையும் கூடவே வர டென்ஷனாகி விட்டாராம். 'உன்னால் தானே குடும்பமே நாசமா போச்சு' என்று, கவுரவ தலையின் கவுரவத்தை கப்பல் ஏற்றினாராம். நடுக்கத்தில் ஆட்டோ பள்ளிக்கூடத்தை கவனித்துக் கொண்டிருந்த அமைச்சரவை பிரதிநிதி, டெல்டா மாவட்டத்தில் உள்ள தொழில் நகரில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதே சூரிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற, பட்டு ஊரைச் சேர்ந்த விஜியானவர் விசில் கட்சியில் சேர்ந்து வேட்பாளர் ஆகி விட்டார். தொகுதிக்குள் அவர் வீரியமாக விசில் சத்தத்துடன் வலம் வர, சூரிய கட்சி பிரமுகருக்கு வேர்த்து விறுவிறுக்கிறதாம். அதனால் என்ன செய்வது என புரியாமல் ஆட்டோ ஓட்டி பிரசாரத்தில் இறங்கி விட்டாராம். வாட்டும் கவலை காவிரி பாயும் ஊரில் இருக்கும் முன்னாள் பிரதமர் பெயர் கொண்ட அமைச்சரவை பிரதிநிதியை எதிர்க்கும் நபரின் பிரசாரம், விசில் போன குக்கராக பலவீனமாக இருக்கிறதாம். அதனால் எப்படியும் தனக்கே வெற்றி என்ற மதமதப்பில் இருந்தாலும், ஒரு விஷயத்தை நினைத்து கவலை அவரை ரொம்பவே வாட்டுகிறதாம். காரணம், அமலாக்கத்துறை வழக்கில் எந்த நிமிடத்திலும் எப்.ஐ.ஆர்., போடப்படலாம் என்ற தகவல் அவ்வப்போது வர, அவருடைய உடம்பு நடுங்குகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !