Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


சீனியரை வீழ்த்தும் திட்டம்

சீனியரை வீழ்த்தும் திட்டம்

பூட்டு ஊரில் இலை கட்சி சார்பில் போட்டியிடும் வாசனானவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று, கட்சிக்குள்ளேயே இருக்கும் அதே மாவட்டத்தின் முக்கியத் தலைவர் கடும் முயற்சி எடுக்கிறாராம். விசுவான அந்த தலைவரும், வாசனானவரும் வெற்றி பெற்று, இலை கட்சி ஆட்சிக்கு வந்து விட்டால், இருவரில் சீனியர் என்ற முறையில் வாசனானவருக்கே அமைச்சரவையில் இடம் கிடைக்குமாம். அதனால், அவரை எப்படியாவது தோற்கடிக்க முயல்கிறாராம் ஜூனியர்.

தேர்தலுக்கு பின் பார்க்கலாம்
தென்னந்தோப்பு சின்னத்தோடு, தென் மாவட்டங்களில் வேகமான பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் தோழியம்மாவுக்கு, அவருடைய இனத்தவர் மத்தியில் பெரும் கூட்டம் கூடுகிறதாம். இது தங்களை பெரிய அளவில் பாதிக்கக்கூடும்; அதனால், அதை ஈடுகட்டுவது போல ஏதாவது செய்ய வேண்டும் என, இலை கட்சித் தலைவரிடம் கட்சி வேட்பாளர்கள் முறையிட்டனராம். 'இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது; தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்' என்று சொல்லி விட்டாராம் தலைவர்.



பதவி பறிபோகும்
கங்கை தொகுதியில் சூரிய கட்சி சார்பில் களம் இறக்கி விடப்பட்டிருக்கும் கரு நடிகருக்கு, போகும் இடங்களில் எல்லாம் சூரிய கட்சியினரே எதிர்ப்பு தெரிவிக்கின்றனராம். இதை கட்சித் தலைமையிடம் சொல்லி, நடிகர் சரிசெய்ய கேட்டுக்கொள்ள, தலைமயிடத்து மருமகனான ஈசனானவர், சூரிய கட்சி பிரமுகர்களை அழைத்து பேசினாராம். அப்போது, 'நடிகர் வெற்றி பெறவில்லை என்றால், பலருடைய கட்சி பதவி காலியாகும். மனதில் வைத்து செயல்படுங்கள்' என எச்சரித்தாராம்.

Advertisement