Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


உற்சாக மலை

 உற்சாக மலை

தாமரை கட்சியின் முன்னாள் தலைவரான மலையானவர், கட்சித் தலைமை தனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். ஆனால், கட்சி பலவீனமாக இருக்கிறது என, தமிழகத்தில் இருந்து சென்ற ரிப்போர்ட்டை அடுத்து, அவசரமாக அவரை தலைநகருக்கு வரவழைத்தனர். அங்கு ஷாவானவர் மலையானவரிடம் பேசி, நிறைய விஷயங்களை கமிட்மென்ட்டாக கொடுக்க, மலையானவர் உற்சாகமாக தேர்தல் களத்தில் சுற்றி வருகிறாராம்.

கணவரின் ஆதரவாளர்கள்
2. வட சென்னையில் அதிரடிக்கு புகழ் பெற்றவராக இருந்தவரின் கதை ஓராண்டுக்கு முன்னால், அவருடைய எதிரிகளால் முடிக்கப்பட்டது. ஆனாலும், ஸ்ட்ராங்கான அந்த மனிதரின் மனைவி, கணவனின் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். தேர்தலில் போட்டியிடும் ஆசை வந்து இலைக்கட்சி தலைவரை சந்தித்து, சீட்டும் பெற்றார். தமிழகம் முழுதும் உள்ள கணவரின் ஆதரவாளர்களை தலைநகருக்கு வரச்சொல்லி, தேர்தல் வேலை பார்க்க வைத்துள்ளாராம் அந்த கொடி பெண்மணி.

Advertisement