Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 14 முதலியார் ; 15 தெலுங்கு வேட்பாளர்கள்! ஓட்டுகளை வளைக்க தி.மு.க., திட்டம்

 14 முதலியார் ; 15 தெலுங்கு வேட்பாளர்கள்! ஓட்டுகளை வளைக்க தி.மு.க., திட்டம்

சென்னை: முதலியார் சமுதாயத்தினரின் ஓட்டுகளுக்காக, அந்த சமூகத்தை சேர்ந்த 14 பேரை வேட்பாளர்களாக, தி.மு.க., களம் இறக்கி உள்ளது.

தி.மு.க.,வை துவக்கியவர்களில், அண்ணாதுரை, நெடுஞ்செழியன், மதியழகன், நடராஜன் ஆகிய நால்வரும் முதலியார் சமுதாயத்தினர்.

இதனால், அச்சமுகத்தினர், பெரும்பாலும் தி.மு.க.,வை ஆதரித்து வந்தனர். தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் உள்ள, 69 தொகுதிகளில், முதலியார் சமுதாய ஓட்டுகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

இந்த தேர்தலில், தி.மு.க., எடுத்த சர்வேயில், முதலியார் சமுதாய ஓட்டுகள் த.வெ.க., மற்றும் பா.ஜ.,வுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிந்தது.

இதையடுத்து, சென்னை அண்ணா நகர், தாம்பரம், ஆலந்துார், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஆற்காடு, கலசப்பாக்கம், கும்பகோணம், சங்கராபுரம், மதுரை மத்தி, வேலுார், திருப்பத்துார், தி.நகர், திருக்கோவிலுார் ஆகிய 14 தொகுதிகளில், முதலியார் சமுதாய வேட்பாளர்களை, தி.மு.க., நிறுத்தியுள்ளது. கடந்த 2021 தேர்தலை விட ஐந்து அதிகம்.

மேலும், முதலியார் சங்கங்கள் வாயிலாக வீடு, வீடாக சென்று, பிரசாரம் செய்யவும் தி.மு.க., ஏற்பாடு செய்துள்ளது.

முதலியார் சமூகத்தினருக்கு, தி.மு.க., அதிக வாய்ப்பளித்துள்ளதாகவும், அ.தி.மு.க.,வில் ஏழு பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளித்துள்ளதாகவும், முதலியார் சமூகத்தினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதேபோல், தமிழகத்தில் தெலுங்கு பேசும் சமுதாயத்தினரும் அதிகமாக உள்ளனர். எனவே, அவர்களின் ஓட்டுகளை குறி வைத்து, தி.மு.க.,வில் தெலுங்கு மொழி பேசுவோர் 15 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டுள்ளனர்.

Advertisement