19,600 பேர் தபால் ஓட்டு போடவில்லை; தலைநகர் சென்னையிலேயே இந்த கூத்து
சென்னை: தேர்தல் ஆணையம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம், 85 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றாலும், அரசு ஊழியர்கள், போலீசார் தபால் ஓட்டு போட ஆர்வம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 28 லட்சத்து, 93,505 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 74,089 பேர், 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களாக உள்ளனர். மொத்தமுள்ள 28 லட்சத்து, 93,505 வாக்காளர்களில், 24 லட்சத்து, 22,097 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, 83.71 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் சிறப்பு திருத்த பணிக்கு முன், 2021 சட்டசபை தேர்தலில், 40 லட்சம் வாக்காளர்களாக இருந்த நிலையில், 24 லட்சத்து, 03,495 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். அவை, 59.24 சதவீதமாக ஓட்டுப்பதிவு இருந்தது.
அதன்படி, 2021 சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது, சென்னை மாவட்டத்தில், 18,602 ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி உள்ளன. அதேபோல், 2024 லோக்சபா தேர்தலில், 21 லட்சத்து, 80,593 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அவற்றை ஒப்பிடும்போது, 2 லட்சத்து, 41,504 ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.
இதில், தி.மு.க., முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்துார் தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில், 1 லட்சத்து, 71,656 ஓட்டுகள் பதிவாகின. தற்போது, 1 லட்சத்து, 82,364 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 10,708 ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி உள்ளது.
அதேபோல், த.வெ.க., முதல்வர் வேட்பாளர் ஜோசப் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், 2021ல், 1 லட்சத்து 99,410 ஓட்டுகள் பதிவாகின. தற்போது, 2 லட்சத்து, 3,057 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. 3,647 ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.
இந்த முறை சென்னை மாவட்டத்திலேயே அதிக ஓட்டுப்பதிவு நடந்த தொகுதியாக ஆர்.கே.நகர் உள்ளது. இங்கு, 90.53 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. அதேநேரம், 2021 சட்டசபை தேர்தலில், 1 லட்சத்து, 86,636 ஓட்டுகள் பதிவாகின. தற்போது, 1 லட்சத்து, 80,473 ஓட்டுகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 6,163 ஓட்டுகள் குறைவாக பதிவாகி உள்ளன.
மக்கள் ஆர்வமாக ஓட்டளித்தாலும், அரசு ஊழியர்கள், போலீசார் தங்கள் ஓட்டு களை சரிவர பதிவு செய்யவில்லை. சென்னையில், 52,047 பேருக்கு தபால் ஓட்டுகள் இருந்தும், 32,447 பேர் ம ட்டுமே ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். மீதம், 19,600 பேர் ஓட்டளிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.
Advertisement
யாரு சொன்னா? எல்லாம் முடிச்சிடோம்..... ஐதராபாத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தும் பிரயோஜனம் இல்லை... காரை விட்டு இறங்கவே விடலையாம் அதிகாரிகள்... ஒரு பெரிய 90 வயது நிரம்பிய பெண்ணிற்கு இந்த நிலைமை...
தபால் ஓட்டுக்களை போடாதது
Present government மேல் இருக்கும் வெறுப்புதான் காரணமாயிருக்கும்.
தீம்க்காவை எதிர்க்காமலும் ஆதரிக்காமலும் லாவகமாக விளையாடி இருக்கிறார்கள். லஞ்சப்பணம் வருவது கூட ஒரு காரணமாக இருக்கலாம். பணம் கொடுப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க இரண்டு பக்கத்திலும் வாங்கி இன்புற்று இருந்ததும் கூட காரணமாக இருக்கலாம்.

பார்லிமென்டில் வோட்டெடுப்புபோது தமிழ்நாட்டு எம்பிக்கள் அதில் கலந்துகொள்ளாமல் பஜ்ஜி சாப்பிட போவதை பார்த்து இவர்களும் காப்பி அடித்திருக்கிறார்கள்