Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 சசிகலா கட்சிக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு

 சசிகலா கட்சிக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு

க டந்த 90களில் புகழ்பெற்று விளங்கிய நடிகர் கார்த்திக், 2006ல், ஆல் இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் தமிழக தலைவரானார். அதன்பின் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கடந்த 2009 லோக்சபா தேர்தலுக்கு பின், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை துவக்குவதாக அறிவித்தார். பா.ஜ., கூட்டணியில் இணைந்து, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

அடுத்து 2011 சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். அந்த தேர்தலிலும் தோல்வி அடைந்தார். அடுத்து வந்த தேர்தல்களில் அவரது கட்சி போட்டியிடவில்லை. அதன்பின் அக்கட்சியை கலைப்பதாக அறிவித்து விட்டு, 2019ல் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற புதிய கட்சியை துவக்கினார். அந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதன்பின் அமைதியாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, நடிகர் கார்த்திக், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்து அவரது கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணி உள்ளிட்டோரும், சசிகலாவை சந்தித்து பேசினர்.

கேரளாவில் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், தேவிகுளம் தொகுதியில், அ.பு.ம.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளராக செல்லத்துரை போட்டியிடுகிறார் என, சசிகலா அறிவித்துள்ளார்.

கேரளாவில்

சசிகலா கட்சி போட்டி

கேரளாவில் வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில், ஒரு தொகுதியில் தங்கள் ஆதரவு வேட்பாளர் போட்டியிடுவதாக, சசிகலா கட்சி அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். கேரளாவில் வேட்பு மனு தாக்கல், கடந்த 23ம் தேதி முடிந்தது. ஏப்., 9ல் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம், தேவிகுளம் தொகுதியில், அ.பு.ம.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளராக, செல்லத்துரை போட்டியிடுகிறார் என, சசிகலா அறிவித்துள்ளார்.

Advertisement