Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அ.தி.மு.க., - மா.செ.,க்கள் 25 பேர் நீக்கம்

 அ.தி.மு.க., - மா.செ.,க்கள் 25 பேர் நீக்கம்

சென்னை: த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்த, வேலுமணி, சி.வி.சண்முகம் உட்பட, 25 பேரை, அ.தி.மு.க., மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து, பழனிசாமி நீக்கியுள்ளார்.

நீக்கப்பட்டவர்கள் விபரம்:

நத்தம் விஸ்வநாதன் -- திண்டுக்கல் கிழக்கு; வேலுமணி -- கோவை புறநகர் தெற்கு; சி.வி.சண்முகம் -- விழுப்புரம்; காமராஜ் -- திருவாரூர்; சி.விஜயபாஸ்கர் - - புதுக்கோட்டை வடக்கு; தங்கமணி -- நாமக்கல்; கே.பி.அன்பழகன் - - தர்மபுரி; பெஞ்ஜமின் -- திருவள்ளூர் மத்தி; உடுமலை ராதாகிருஷ்ணன் -- திருப்பூர் புறநகர் மேற்கு; ஜக்கையன் -- தேனி மேற்கு; இசக்கி சுப்பையா -- நெல்லை புறநகர்; எம்.சி.சம்பத் -- கடலுார் வடக்கு; கே.சி.வீரமணி -- திருப்பத்துார் வடக்கு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் -- கரூர்; ராமலிங்கம் -- ஈரோடு மாநகர்;

பாலகிருஷ்ண ரெட்டி -- கிருஷ்ணகிரி மேற்கு; அருண்மொழித்தேவன் -- கடலுார் மேற்கு; ரவி -- ராணிப்பேட்டை கிழக்கு; மகேந்திரன் -- திருப்பூர் புறநகர் கிழக்கு; கப்பச்சி வினோத் -- நீலகிரி; சீனிவாசன் -- திருச்சி மாநகர்; பரஞ்சோதி -- திருச்சி புறநகர் வடக்கு; குமார் -- திருச்சி புறநகர் தெற்கு; ரத்தினசாமி -- தஞ்சை மேற்கு; சேகர் - தஞ்சை மத்தி என, 25 மாவட்ட செயலர்கள் நீக்கப்பட்டு, புதிய மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதிய மாவட்ட செயலர்கள் விபரம்:

கடலுார் தெற்கு மாவட்டம் -- சொரத்துார் ராஜேந்திரன்; தர்மபுரி கிழக்கு -- அசோகன்; தர்மபுரி மேற்கு -- டி.ஆர்.அன்பழகன்; திருப்பூர் புறநகர் -- சிவசாமி; திருச்சி புறநகர் வடக்கு - - யோகநாதன்; திருச்சி புறநகர் தெற்கு -- மனோகரன்; தஞ்சை மத்தி -- காந்தி; திண்டுக்கல் கிழக்கு -- சீனிவாசன்; திண்டுக்கல் மேற்கு -- பரமசிவம்; விழுப்புரம் -- பசுபதி; கோவை தெற்கு -- செ.ம.வேலுசாமி; புதுக்கோட்டை வடக்கு -- பழனிவேல்; நாமக்கல் -- பாஸ்கர்; திருவாருர் -- மூர்த்தி என்கிற தட்சிணாமூர்த்தி;

திருவள்ளூர் மத்தி -- ரவிசந்திரன்; ராணிப்பேட்டை கிழக்கு -- லோகநாதன்; ராணிப்பேட்டை மேற்கு - - சுமைதாங்கி ஏழுமலை; திருப்பத்துார் -- பசுபதி; கடலுார் வடக்கு -- தாமோதரன்; கிருஷ்ணகிரி மேற்கு -- ராமு; ஈரோடு மாநகர் -- மனோகரன்; நீலகிரி -- கார்த்திகேயன்; கரூர் -- கமலக்கண்ணன்; தேனி -- நாராயணசாமி; நெல்லை புறநகர் -- ராமசுப்பிர மணியன்.

இதையடுத்து, '26 மாவட்ட செயலர்களை பொறுப்பில் இருந்து, பழனிசாமி நீக்கியது கட்சியின் சட்ட விதிகளின்படி செல்லாது' என சி.வி.சண்முகம் நேற்று இரவு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பழனிசாமி தரப்பை சேர்ந்த 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, ''தேர்தலில் போட்டியிட, எந்த அதிகாரத்தில் பழனிசாமி வாய்ப்பு கொடுத்தாரோ, அதே அதிகாரத்துடன் தான் அவர்களை நீக்கியுள்ளார்,'' என தெரிவித்தார்.

Advertisement