சிபிஐ மிரட்டலால் உருவானது அதிமுக கூட்டணி : திருமாவளவன் குற்றச்சாட்டு
ஸ்ரீமுஷ்ணம்: அதிமுக கூட்டணி சிபிஐ மிரட்டலால் உருவானது என, விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
ஸ்ரீமுஷ்ணத்தில், காட்டுமன்னார்கோவில் வி.சி., கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்றால் இளையபெருமாள் கமிஷனின் பரிந்துரையும் முக்கியமானது.வேட்பாளரின் குடும்பத்தினர் காங்., கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது, முழுதாக நம்முடைய கட்சியினராக மாறி களத்தில் நிற்கிறார்.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுககூட்டணியில் இருந்ததால் தான் விசி கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. விசிக சட்டசபை தேர்தலில் அங்கீகாரம் பெற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
அதிமுக - பாஜ கூட்டணி வென்றால் தமிழகத்தில் சமூக நீதி பேசமுடியாத நிலை ஏற்படும். அதிமுக கூட்டணிக்கு போடும் ஓட்டு பாஜவிற்கு போடும் ஓட்டு. அதிமுக, பாமக, அமமுக, தலைவர்களை பாஜ அரசு சிபிஐ மூலம் மிரட்டி உள்ளது. அது, சிபிஐ மிரட்டலால் உருவாக கூட்டணி.
நம்முடைய கூட்டணி சிபிஐ கூட்டணி, கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரி சிந்தனையாளர்கள் உள்ள சமூக நீதிக்கு ஆதரவான முற்போக்கு கூட்டணி. பாஜ - அதிமுக வலது சாரி சிந்தனை உள்ள சமூக நீதிக்கு எதிரான பிற்போக்கு கூட்டணி. நமது கூட்டணி சமூக நல்லிணக்கம் நிலவும் கூட்டணியாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்