ஸ்டாலின் விஷம பிரசாரம்: மத்திய அமைச்சர் கண்டனம்
சென்னை : 'திமுக தலைவர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறையை வைத்து விஷம பிரசாரம் செய்கிறார்' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை நடைமுறைப்படுத்த, பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதால், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன.தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாத வகையில், தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறையை வைத்து விஷம பிரசாரம் செய்து வருகிறார்.
ஐந்து ஆண்டு ஆட்சியில் செய்ததை சொல்லி ஓட்டு கேட்க திராணியற்ற ஸ்டாலின், தமிழகத்திற்கு எதிராக பாஜ செயல்படுவதாக, பொய்யை கட்டமைக்கிறார். மத்தியில், திமுக - காங் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, மக்கள் தொகை அடிப்படையில், தொகுதிகள் தீர்மானிக்கப்பட்டு, தமிழக உரிமைகள் பறிபோனபோது, தி.மு.க., என்ன செய்து கொண்டிருந்தது? மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துவிட கூடாது என்பது மட்டும் தான், திமுக எண்ணம். ஜமின்தார் அரசியல் செய்யும் கருணாநிதி குடும்பத்திற்கு, பெண்களிடம் அதிகாரத்தை கொடுப்பது என்றாலே கசக்கத்தானே செய்யும். தன் மகன் உதயநிதிக்கு மகுடம் சூட்ட விரும்பும் ஸ்டாலின், தன் சகோதரி கனிமொழி அரசியலில் வளர்வதை கூட சகித்துக்கொள்ள முடியாதவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்