அ.தி.மு.க., வேட்பாளர்கள் அண்ணாமலை சந்திப்பு
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., தனித்து போட்டியிட்டன. அப்போது, தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை, கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவருக்கு, கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிக ஆதரவாளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளன.
அ.தி.மு.க., வேட்பாளர்களான, கோவை தெற்கு - அம்மன் அர்ஜுனன்; சிங்காநல்லுார் - ஜெயராம்; கவுண்டம்பாளையம் - அருண்குமார்; சூலுார் - கந்தசாமி ஆகியோர், தங்கள் ஆதரவாளர்களுடன், அண்ணாமலையை கோவையில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு ஆதரவாக, அண்ணாமலை பிரசாரம் செய்ய உள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்