அதிமுக செய்தது பெரிய தவறு: கெஜ்ரிவால்
சென்னை: பாஜவை தமிழகத்துக்கு அழைத்து வந்து அதிமுக பெரிய தவறை செய்துவிட்டது என டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் உடன் இணைந்து பிரசாரம் செய்த கெஜ்ரிவால் கூறியதாவது: ஸ்டாலினை போன்ற தலைவரை பார்க்க முடியாது. இதனால் அவருக்கு பிரசாரத்திற்கு வந்தேன்.அவரது எனது சகோதரர், நண்பர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளை செய்துள்ளார்.
டில்லி முதல்வராக இருந்த போது, தமிழக முதல்வர் என்னை அழைத்தார். டில்லியில் நாங்கள் செய்த நல்ல பணிகளை பார்க்க வேண்டும் என்று சொன்னார். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. வழக்கமாக, முதல்வர்களுக்கு அதிக ஈகோ இருக்கும். மற்ற மாநிலங்களில் நடக்கும் நல்ல பணிகளை பார்க்க அவர்கள் செல்ல மாட்டார்கள்.
ஆனால் ஸ்டாலினுக்கு ஈகோ கிடையாது. மக்களுக்காக பணியாற்றுகிறார். அவர் டில்லி வந்து, நாங்கள் அமைத்த மருத்துவமனை, கிளினிக், பள்ளிகளை பார்வையிட்டார். தமிழகத்தில் அவர் பார்வையிட்டார்.
வேறு எங்கும் இல்லை
நான் தமிழகம் வந்து வளர்ச்சி பணிகளை பார்வையிட்டேன். முதல்வர் காலை உணவு திட்டம் இங்கு செயல்படுத்தப்படுகிறது. வேறு மாநிலங்களில் இது செயல்படுத்தப்படவில்லை. வீட்டு வாசலில் மருத்துவ சேவை இங்கு கிடைக்கிறது. வேறு எங்கும் கிடைக்கவில்லை.
என்டிஏ என்பது நியூடெல்லி கூட்டணி. என்டிஏ கூட்டணி என்பது அதிமுக, பாஜ சேர்ந்த கூட்டணி இல்லை. என்டிஏ என்பது பாஜ மட்டுமே. அதிமுகவை பாஜ கைப்பற்றிவிட்டது. பாஜவின் முழுமையான கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. பீஹாரில் நடந்ததை பார்க்க வேண்டும். நிதிஷ்குமார், நேற்று வரை பீஹார் முதல்வராக இருந்தார். இன்று ராஜ்யசபா எம்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
வெறுப்பு
நாளைக்கு அதிமுகவுக்கும் இது நடக்கும். அதிமுக மூன்று கட்சிகளாக பிரிக்கப்படும். பிறகு அதனை பாஜ கைப்பற்றிவிடும். தமிழகத்தை கைப்பற்ற பாஜ நினைக்கிறது. ஆனால், பாஜவை தமிழக மக்கள் வெறுக்கின்றனர். தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு பாஜ தேவையில்லை. பாஜவை தமிழகத்துக்கு அழைத்து வந்து அதிமுக பெரிய தவறை செய்துள்ளது.
ஓராண்டு முன்பு டில்லி மக்கள் தவறு செய்தனர். தற்போது, நாங்கள் செய்த அனைத்து நல்லதிட்டங்களை நிறுத்திவிட்டனர். மருத்துவமனையை மூடிவிட்டனர். கிளினிக்குகளை மூடிவிட்டனர். மின்சார கட்டணத்தை உயர்த்திவிட்டனர். அதிமுக பாஜ கூட்டணிக்கு ஓட்டுப்போட்டால், ஸ்டாலின் கொண்டு வந்த நல்லபணிகளை நிறுத்திவிடுவார்கள். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
நேரலை
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் உடன் இணைந்துடில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தது தினமலர் சமுக வலைதளத்தில் நேரலை செய்யப்பட்டது.
இதனை பார்க்க கிளிக் செய்யவும்
Advertisement
அடக்கடவுளே, அப்பாவை ஆதரித்து பேசுகிறாரே இந்த கெஜ்ஜிரி...அப்போ, இவர் ஊழல் வாதி தானோ...டெல்லி மதுபான ஊழலும் உண்மைதான் போல...
பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கியவர்களுக்கு பல்லாயிரம் கோடி மதுபான ஊழல் செய்தவர்கள் வக்காலத்து? உங்களது சின்னம் என்ன வெளக்கமாறுதானே? அதுதான் இப்ப ஞாபகத்துக்கு வருது!
டெல்லியில் மூடப்பட்டதாக நீங்கள் சொன்ன மாதிரியான அம்மா உணவகம் ,அம்மா மினி கிளினிக் போன்றவைகளை இங்கு மூடி விட்டார் ஸ்டாலின். இது உங்களுக்கு தெரியுமா கெஜ்ரி?
கமல் சொன்ன வடவர் இவர் தானா
இவர் க்யா மொழியில் பேசினார். வடக்கன் பானி பூரி போட தான் லாயக்கு என்று சொன்னவங்களை ஆதரிக்க டில்லியிலிருந்து சென்னைக்கு வந்தீரா. அறிவிலி.
மக்கள் பணத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து அரண்மனை கட்டிய
புனிதர் இந்த ஊழல் அரசியல் வாதி.

சாத்தான் வேதம் ஓதுது