Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் அன்புமணி

 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் அன்புமணி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 3 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி, சேலம் மேற்கு, விக்கிரவாண்டி, சோளிங்கர், தர்மபுரி, பென்னாகரம், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்தரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம்,காட்டுமன்னார்கோயில்,சேலம் வடக்கு,அம்பத்தூர், ரிஷிவந்தியம், கீழ்வேளூர்,பெரம்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டுள்ளார்.

இதன்படி,
கீழ்வேளூர் - வடிவேல் ராவணன்
அம்பத்தூர்- கே.என். சேகர்
செஞ்சி - கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

எஞ்சிய வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement