திமுகவுக்கு இன்னொரு அதிர்ச்சி; கொளத்துாரில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி
-நமது நிருபர்-
கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின், தவெக வேட்பாளரிடம் 4352 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
முதல்வர் ஸ்டாலின், சென்னை மாவட்டம் கொளத்துார் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், தவெக சார்பில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாபு ஆகியோர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே தவெக வேட்பாளர் பாபு முன்னிலையில் இருந்தார். கடைசி சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், முதல்வர் ஸ்டாலின் 4352 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கருணாநிதி, தன் அரசியல் வாழ்வில் தேர்தலில் தோல்வி அடைந்ததே இல்லை. ஆனால், அவரது மகனான ஸ்டாலின், ஏற்கனவே ஆயிரம் விளக்கு தொகுதியில் இரண்டு முறை தோல்வியை தழுவியுள்ளார். இப்போது மூன்றாம் முறையாக கொளத்துாரில் தோல்வியை தழுவியுள்ளார்.
கடந்த 6 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற ஸ்டாலின், இந்த தேர்தலில் தோல்வி அடைந்திருப்பது, கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு. அதுவும் முதல்வராக இருக்கும்போதே தோல்வியை தழுவியது மாபெரும் அவமானம் என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்