Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மீண்டும் திரும்புகிறதா 2006? மெஜாரிட்டி இல்லாமல் தவிக்குமா தமிழக சட்டசபை?

 மீண்டும் திரும்புகிறதா 2006? மெஜாரிட்டி இல்லாமல் தவிக்குமா தமிழக சட்டசபை?

சென்னை: 2006 சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தார் கருணாநிதி. அதேபோல் இந்த 2026 சட்டசபை தேர்தலிலும் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டால் யார் ஆட்சி அமைப்பர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நடந்த சட்டசபை தேர்தலில் 2006ல் மட்டுமே எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது அதிகபட்சமாக 96 இடங்களில் திமுக வென்றிருந்தது. இதனால் தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், பாமக, கம்யூ., கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது திமுக. கூட்டணி கட்சிகள் ஆதரவளித்தாலும் யாருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை.

இதனைக் குறிப்பிட்டே எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, வார்த்தைக்கு வார்த்தை 'மைனாரிட்டி திமுக அரசு' என சொல்லிக்கொண்டே இருந்தார். பிரசாரத்திலும் அதையே குறிப்பிட்டு பேசி 2011ல் ஆட்சியை கைப்பற்றினார் ஜெயலலிதா. அதன்பிறகு நடந்த தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மை உடனேயே அதிமுக, திமுக கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தன. ஆனால் தற்போதைய சட்டசபை தேர்தலில் மதியம் 2.30 மணி நிலவரப்படி விஜயின் தவெக 109 இடங்களிலும், திமுக கூட்டணி 64 இடங்களிலும், அதிமுக கூட்டணி 61 இடங்களிலும் முன்னிலை வகித்தன.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் இப்போதிருக்கும் சூழலில் எந்த கட்சியும் அந்த நிலையை எட்ட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. எனவே, 2006 தேர்தலை போல மீண்டும் ஒரு காட்சி அரங்கேறியுள்ளது தமிழகத்தில். விஜயின் த.வெ.க தான் அதிக இடங்களை கையில் வைத்துள்ளதால் விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியில் அமர வாய்ப்புள்ளது.

விஜய் ஆட்சி அமைக்க அதிமுக, விசிக., காங்., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஆதரவு அளித்து, அமைச்சரவையிலும் இடம் பெறலாம்.

Advertisement

மே 04, 2026 06:20 pm

தனி மெஜாரிட்டி கிடைத்தாலே இவர்கள் எப்படி ஆட்சி செய்யப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி. இதில் இடையில் வந்த செங்கோட்டையன் தவிர வேறு யாருக்கும் ஆட்சி பற்றி எதுவும் தெரியாது. அரசியல் வேறு ஆட்சி வேறு. இதை சமாளித்தால் விஜய்க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது, வீழ்ந்தால் அப்படியே ஓரம் தான்... காங்கிரஸ்-பாமக-தேமுதிக போன்ற வெற்றி பெற்ற உதிரி கட்சிகள் முட்டு கொடுக்கும். ஆட்சி அப்படியே நகரும். ஆட்சி வீழ்வதற்கு வாய்ப்பில்லை. மேலும் மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி எந்த மாநிலத்தையும் இதுவரை நீக்கியது கிடையாது. அதனால் விஜய் ஆட்சி தானாக கவிழ்ந்தால் மட்டுமே.

Reply Rate this
மே 04, 2026 05:44 pm

மக்கள் இன்னும் சினிமாவை உண்மை என்று நம்புவதை உறுதி செய்து விட்டது

Reply Rate this
மே 04, 2026 04:43 pm

எடப்பாடியார் அவையில் முதலுவரே ன்னு கூப்புடணும் ....

Reply Rate this
மே 04, 2026 04:26 pm

காங்கிரஸ் விசிக உண்டியல் தேமுதிக மதிமுக போன்ற உதிரி கட்சிகள் விஜய் கட்சியுடன் சேர்ந்துவிடும்.

Reply Rate this