மக்களை காக்க நீங்கள் தயாரா? பிரதமர் மோடிக்கு முதல்வர் கேள்வி
சென்னை: 'மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கு மக்களை தயாராக இருக்க சொல்லும் முன், அவர்களை காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா' என, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: 'கொரோனா ' தொற்றுக்கு தயாரானது போல, மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும்' என, பிரதமர் கூறியுள்ளார். தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா; நாட்டு மக்களா?
போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் 'தாக்கங்களை உண ர்ந்து, அனைத்து பயன்பாடுகளுக்கான சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, தங்களுக்கு நான் கடிதம் எழுதினேன்.
பொறுப்புள்ள மாநில அரசாக, 'தமிழகத்தில் உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் மின் அடுப்புகளை பயன்படுத்த, கூடுதல் மின்சார நுகர்வுக்கு யூனிட் ஒன்றுக்கு 2 ரூபாய் மானியம்' என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டேன். இந்திய மக்களை பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்