Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது; அனல் பறக்குது அரசியல் களம்!

பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது; அனல் பறக்குது அரசியல் களம்!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்

தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பா.ஜ.,வும், காங்கிரசும் மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் இழுபறி நீடித்தது. ஒரு வழியாக வேட்பாளர்கள் பட்டியலை இன்று (ஏப்ரல் 03) பாஜ வெளியிட்டது.

பாஜ வேட்பாளர் பட்டியல் (27 தொகுதிகள்)

1.மயிலாப்பூர்- தமிழிசை
2.தளி- நாகேஷ்குமார்

3.மொடக்குறிச்சி- கிருத்திகா சிவக்குமார்
4.ஊட்டி-போஜராஜன்
5.அவிநாசி- எல்.முருகன் (மத்திய அமைச்சர்)
6.திருப்பூர் தெற்கு- தங்க ராஜ்
7.கோவை வடக்கு- வானதி சீனிவாசன்
8.கந்தர்வக்கோட்டை- உதயகுமார்
9.புதுக்கோட்டை- ராமசந்திரன்
10.ராசிபுரம்- பிரேம் குமார்
11.மதுரை தெற்கு- ராமசீனிவாசன்
12.சாத்துார்- நயினார் நாகேந்திரன்
13.திருச்செந்துார்- ராதாகிருஷ்ணன்
14.வாசுதேவநல்லுார்- அனந்தன் அய்யாசாமி
15.ராதாபுரம்- பாலகிருஷ்ணன்
16.நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி
17.விளவங்கோடு- விஜயதாரணி
18.ஆவடி- ராஜசிம்மா மகேந்திரா
19.திருவண்ணாமலை- ஏழுமலை
20.தஞ்சாவூர்- முருகானந்தம்
21.திருவாரூர்- கோவி சந்துரு
22.அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த்
23.மானாமதுரை- பொன் பால கணபதி
24.ராமநாதபுரம்- நாகேந்திரன்
25.குளச்சல்- சிவக்குமார்
26.பத்மநாபபுரம்- ரமேஷ்

தென்னிந்திய பார்வர்டு கட்சியைச் சேர்ந்த திருமாறனுக்கு திருப்பத்தூர் தொகுதியை பாஜ ஒதுக்கி உள்ளது. பாஜ சின்னத்தில் அவர் போட்டியிட உள்ளார்.
திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்கராஜ், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் மகன். ராசிபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரேம்குமார், பாஜ மாநில துணைத்தலைவர் வி பி துரைசாமியின் மகன்.
ஊட்டி தொகுதியில் போட்டியிடும் போஜராஜன், கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் கிருத்திகா சிவக்குமார், தற்போதைய எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகள்.

பெண்கள் 5 பேருக்கு வாய்ப்பு

தமிழக தேர்தலில் போட்டியிட பெண்கள் 5 பேருக்கு பாஜ வாய்ப்பு அளித்துள்ளது. அதேநேரத்தில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தலில் போட்டியிட வில்லை.

Advertisement