தவெக குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெறும்: சொல்கிறார் செங்கோட்டையன்
ஈரோடு: தவெக குறைந்தது 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என கோபிசெட்டிபாளையம் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: சீமான் ஆட்சிக்கு வரப்போவதில்லை; அதனால் அவர் கருத்துக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. 9 முறை ஆட்சியில் இருக்கிற போது, ஆட்சி அதிகாரம் யாருடைய தலைமையில் இருக்கிறதோ, அவர்களின் கருத்தை கேட்டு தான் இயங்கி ஆக வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் எனது கருத்துகளை சொல்லி விமர்சனங்கள் செய்ய இயலாது. இன்றைக்கு இருக்கும் நிலை, நாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இவர்கள் இடத்தில் இருக்கிறது.
200 தொகுதிகளில்…
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாடு செழிக்க, மக்கள் செழிக்க எல்லோரும் எல்லாம் பெறுவதற்கு அவர் எல்லா வகையிலும் உதவியாக இருப்பார். தவெக குறைந்தது 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.
தவெக கூட்டத்திற்கு அரசு முழுமையான பாதுகாப்பை அளிக்கவில்லை. திருச்சியில் முழு பாதுகாப்பு அளித்தார்கள், அதற்கு நன்றி. எல்லோருக்கும் கனவுகள், ஆசை இருக்கிறது. அதை நிறைவேற்றுவது மக்கள் தான். மாற்றம் வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசை.
எல்லோருடைய கனவு
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் மாற்றம் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய கனவு. தவெக தலைவர் விஜய்க்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தடுமாறுகிறது. இதுபோன்ற நிலை இந்தியாவிலேயே எந்த தலைவருக்கும் வந்தது இல்லை.
முன்னாள் சபாநாயகர் தனபால் இயக்கத்துக்கு சோதனை வருகின்ற போது 2 முறை முன்னின்று காப்பாற்றினார்; அவருக்கு இடமில்லையென்றால் எவ்வளவு தூரம் இருக்கிறது, என்று புரிந்துகொள்ள வேண்டும்; பணம் இருந்தால் தான் அதிமுகவில் இடம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
Advertisement
234 ல யும் டெபாசிட் இழக்க போறிங்க... dmk ஓட b டீம் தான... கமலஹாசன் மட்டும் எப்புடி 24 மணி நேரமும் வாட்ச்மேன் வேலை பாக்கமுடியும்.. so டூட்டி மாத்திவிட ஜோசப் விஜய் வேணும் தான.. ஜனநாயகன் படம் வெளியிட தியேட்டர் கிடைக்காம செஞ்சவங்களுக்கு எதிரா எதுவும் செய்ய முடியாது.. so படம் ரிலீஸ் செய்யணும் நா ரெட் ஜியோண்ட் சப்போர்ட் வேணும்.. அதுக்காக அவங்கள எதிர்க்கிற மாதிரி எதிர்ப்பு வோட் கள பிரிச்சு திரா விஷ மாடல் க்கு உதவ போற...
Confidence..ன்ஸ்.. .. ம்ம்ம் ... செங்கு... உங்க தொகுதில நீங்க டெபாசிட் வாங்கினாலே 234 யும் ஜெயிச்சமாதிரிதேன் ... குப்பை கூளத்துக்கு எல்லாம் சீட்டை குடுத்துப்புட்டு இதுல 200க்க்கும் மேல..... என்ன செங்கு இது...
இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சா 234 லயும் ஜெயிக்க வாய்ப்பு இருக்கு. முயற்சி செய்யுங்க
ஒருவேளை நீங்கள் அடுத்து தயாரிக்கும் திரைப்படத்தில் வேண்டுமானால் இந்த கனவும் கணிப்பும் நிச்சயம் நிறைவேறும். முதல்வர்ப் பதவி விளையாட்டுப் பொம்மையா, கடையில் வாங்குவதற்கு. அரசியல் ஏட்டுக் கல்வியில்லை, வாங்கக் கூடிய பொருளில்லை.
தமிழகத்தில் என்ன 800க்கு மேலா தொகுதிகள் உள்ளன? ஒவ்வொரு கட்சியும் தாங்கள் 200க்கும் மேலான தொகுதிகளை வெல்வோம் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்களே?
இவரை சொல்லி குற்றம் இல்லை, காலம் செய்த கோலம், அம்மா சொல்லை மீறி செங்கோட்டையார் செங்கோட்டை தாண்டிவிட்டார், இனி செங்கோட்டை ஏப்ரல் 24 இடிந்து விழப்போகுது.

Day dreaming