Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஒரு ஓட்டுக்கான பஞ்சாயத்தில் த.வெ.க.,வுக்கு பா.ஜ., ஆதரவு

ஒரு ஓட்டுக்கான பஞ்சாயத்தில் த.வெ.க.,வுக்கு பா.ஜ., ஆதரவு

சிவகங்கை: திருப்புத்துாரில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் பெரியகருப்பனை தோல்வி அடைய செய்ய ஓட்டு எண்ணும் மையத்தில் த.வெ.கவிற்கு ஆதரவாக பா.ஜ., நிர்வாகிகள் வாக்குவாதம் செய்து அதிர்ச்சி ஏற்படுத்தினர்.
திருப்புத்துார் தொகுதியில் பெரியகருப்பன் தொடர்ந்து முன்னிலையில் இருந்ததார். கடைசி 3 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் 'டிஸ்பிளே' பழுதானதால் ஓட்டு உறுதி தன்மை இயந்திரத்தில் இருந்த சீட்டுக்களை எண்ண முடிவெடுக்கப்பட்டது. எண்ணியபின் த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதியை விட ஒரு ஓட்டு பெரியகருப்பனுக்கு குறைவாக இருந்தது. இரவு 11:30 மணி ஆன பின்னும் முறைப்படி அறிவிக்கவில்லை.
திருப்புத்துார் தொகுதிக்கு பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரான சத்தியநாதன் தி.மு.க.,வில் இருந்து வந்தவர். அவர் கட்சியில் இருந்தபோது சிவகங்கையில் போட்டியிட வாய்ப்பு பெற விடாமல் பெரியகருப்பன் முட்டுக்கட்டை போட்டார். அதனால் அங்கிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். நேற்று முன்தினம் இரவு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு ஓட்டு வித்தியாசம் என்றாலும் த.வெ.க., வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருப்பினும் அமைச்சர் தோல்வி என அறிவிக்க மனமில்லாத அதிகாரிகள் செல்லாமல் போன 306 தபால் ஓட்டுக்களை எண்ண துவங்கினர். அதிலும் பெரியகருப்பனுக்கு சாதகம் இல்லை. வேறு வழியின்றி த.வெ.க., வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை என அறிவித்தனர்.
வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இறுதியாக தேர்தல் கமிஷன் விதி எனக்கூறி இரவு 11:30 மணிக்கு மேல் 'ரேண்டமைசேஷன்' என்ற முறைப்படி 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள சீட்டுக்களை எண்ண முடிவு செய்தனர். அதை எண்ணி முடிக்க நேற்று அதிகாலை 2:00 மணி ஆனது. அதிலும் பெரியகருப்பனுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
இறுதியில் சீனிவாச சேதுபதி -83,375, பெரியகருப்பன் ஓட்டு- 83,374 ஓட்டுகள் பெற்றுள்ளதாகவும், த.வெ.க., வெற்றி பெற்றதாகவும் அறிவித்தனர்.

Advertisement

மே 06, 2026 06:38 am

தீயசக்தியை அழிக்க யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம் தான். அதில் தவறே கிடையாது. அதிலும் திமுகவை சேர்ந்தவர் என்றால் அவருக்கு எதிராக எதையுமே செய்யலாம் தவறே இல்லை.

Reply Rate this
மே 06, 2026 06:13 am

அரசு அதிகாரிகள்??? அவர்கள் கட்சிக்காரர்கள்

Reply Rate this