Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 வாங்கிக்கோ நோட்டு; போய் கேளு ஓட்டு

 வாங்கிக்கோ நோட்டு; போய் கேளு ஓட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் நடந்தபோது, அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அழைப்பு இல்லை என்ற காரணம் கூறி கலந்து கொள்ளவில்லை. இதை அமைச்சர் நேருவும் ஆதரித்தார். இதுகுறித்து நம் நாளிதழின் 'தேர்தல் களம்' பகுதியில், 'பூசலால் மூழ்கும் ம.ம.க., வேட்பாளர்' என்று செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக மணப்பாறையில் உள்ள தன் நிர்வாகிகளை அழைத்து, ஆதரவாளர்களுக்கு தலா, 10,000 ரூபாய் கொடுத்து தேர்தல் பணியை முடுக்கிவிடும்படி நேரு அறிவுறுத்தினார். நிர்வாகிகளும் உரிய தொகையை கொடுத்துள்ளனர். நேருவும் நேரில் சென்று ஆதரவாளர்களை சந்தித்து பேசி விட்டு, பின்னர், திருச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

Advertisement