Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மாவட்ட தலைவர்களுக்கு சொகுசு கார் பரிசு

 மாவட்ட தலைவர்களுக்கு சொகுசு கார் பரிசு

பா. ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு, அக்கட்சி சொகுசு காரை பரிசாக வழங்க உள்ளது.

தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் திருநெல்வேலி, நாகர்கோவில், மொடக்குறிச்சி, கோவை தெற்கு ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலின் வாயிலாக, 20 ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர்.

இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற வைத்த குமரி, நெல்லை, கோவை, ஈரோடு தெற்கு மாவட்டங்களின் தலைவர்களுக்கு தலா, ஒரு 'இன்னோவா' கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களை வெற்றிபெற வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு, மஹிந்திரா எக்ஸ்.யு.வி., அல்லது இன்னோவா கிரிஸ்டா கார்களை பரிசாக, பா.ஜ., வழங்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கையால் பரிசுகள் வழங்கப்படும் என, பா.ஜ., மாநில நிர்வாகி ஒருவர் கூறினார்.

Advertisement