2,708 உதவி பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்வதா?
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு, 2,708 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு, கடந்த டிசம்பர் 27ல் நடந்தது. அதன் முடிவுகளை இன்னும் வெளியிடாத நிலையில், 13 ஆண்டுகளுக்கு பின் அறிவிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் நியமனம் ரத்தாகலாம் என செய்தி வெளியாகியுள்ளது. இதனால், தேர்வு எழுதியவர்களின் கனவு சிதையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் தமிழக அரசு இருப்பதால் தான், உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருப்போரின் சாபம், தி.மு.க.,வை சும்மாவிடாது.
மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு, ஒரே நாளில் 6,550 கோடி ரூபாயை வழங்கிய தி.மு.க., அரசு, 'மாதம் 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்க நிதி இல்லை' என உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்ய முயற்சிப்பது சமூக அநீதி.
-- அன்புமணி
தலைவர், பா.ம.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்