Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மண்ணின் மைந்தராக இல்லாத வேட்பாளர்கள்

 மண்ணின் மைந்தராக இல்லாத வேட்பாளர்கள்

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக ஆனந்தன் போட்டி யிடுகிறார். இவர் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இந்திய கம்யூ., வேட்பாளர் ரவி, தொடர்ந்து மூன்றாவது முறையாக வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயாவும், த.வெ.க. வேட்பாளராக, முன்னாள் எம்.பி. சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர்.

சத்தியபாமா கோபியைச் சேர்ந்தவர்; மற்ற மூவரும், திருப்பூர் தெற்கு தொகுதியில் வசிப்பவர்கள். இந்த நான்கு பேருமே மண்ணின் மைந்தர்கள் என்ற அந்தஸ்தை பெறாததால், அவர்களுக்காக அவர்களே ஓட்டளிக்க முடியாது.

திருப்பூர் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.வை எதிர்த்து தி.மு.க. போட்டி யிடுகிறது.

''திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் தாமரை சின்னத்திலும், இ.கம்யூ., வேட்பாளர் உதயசூரியன் சின்னத்திலும் தான் ஓட்டளிக்க முடியும், அவர்களுடைய கட்சி சின்னத்தில் வாக்களிக்க முடியாது'' என்கின்றனர் வாக்காளர்கள்.

Advertisement