Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார் அபின் தினேஷ் மோதக்

சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார் அபின் தினேஷ் மோதக்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மாற்றப்படடு, புதிய போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் இன்று ஏப்.,10 பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக சட்டசபைக்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் புதிய தலைமைச்செயலராக நியமிக்கப்பட்டார். டிஜிபி ஆக இருந்த வெங்கட்ராமனுக்கு பதில், சந்தீப் ராய் ரத்தோர் புதிய டிஜிபி ஆக பதவியேற்றுள்ளார். மேலும் பல மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனராக இருக்கும் அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதில் புதிய போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இன்று இரவு அபின் தினேஷ் மோதக் சென்னை போலீஸ் கமிஷனர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.

புகார்

'சமூக ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில், தமிழக பா.ஜ., தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்க்கது.

Advertisement