Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


வெற்றியை வாரி வழங்கிய முதல்வர் விஜய்யின் 'ஸ்டார்ட் அப் பார்முலா'

வெற்றியை வாரி வழங்கிய முதல்வர் விஜய்யின் 'ஸ்டார்ட் அப் பார்முலா'

கோவை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு, வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

'விஜய் ஒரு சிறந்த ஸ்டார்ட் அப் தலைவர்' என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் பாராட்டுமளவுக்கு, தேர்தலில் விஜய் பின்பற்றிய உத்தி ஆழமாக விவாதிக்கப்படுகிறது.

கோவையில் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அவர்கள், விஜய்யின் வெற்றியை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பார்முலாவாக தொகுத்து விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பரப்பி வரும் பதிவு:

* நாம் அறிமுகப்படுத்தும் பொருளுக்கான கூட்டத்தை முன்பே திரட்ட வேண்டும் (விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தினார்).
* மக்களிடம் எது ஏமாற்றமாக உள்ளதோ, அந்த குறையை போக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
* ஒருபோதும் போட்டியாளர்களை மட்டுமே எதிர்க்கக் கூடாது. ஏமாற்றத்தில் இருந்து மாற்றம் கொடுக்கும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும்.
* எந்த தருணத்திலும் தள ராமல் உறுதியுடன் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.
* தெளிவாக செயல்பட்டால் வெளியில் எவ்வளவு இரைச்சல்கள் இருந்தாலும் பின்னடைவு ஏற்படாது.
* சமூகம் தான் சிறந்த விநியோக சங்கிலி (ரசிகர் மன்றங்கள் விஜய்யின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன).
* சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இதையெல்லாம் சரியாக செய்து, கடைசியில் மக்களிடம் தெளிவாக பேசினால் வெற்றி நம் வசமாகும்.
இவ்வாறு, அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மே 18, 2026 06:17 pm

ஒருத்தன் வெற்றி பெற்று விட்டால் துதிபாட ஆயிரம் பேர் வருவர். சென்ற தடவை பில்டப் செய்து எப்படியெல்லாம் பேசினார்கள். ஸ்டார்டப் அமோகமா இருக்கும்..அதன் தரம் பின்னால் தான் தெரியும்.

Reply Rate this
மே 18, 2026 05:25 pm

அரசியல் கட்சிகள் இனி மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது இல்லை
கவர்ச்சி காரமாக இருந்தால் போதும்
என்று நினைப்பது குறுகிய கால பலன் மட்டுமே கிடைக்கும்

Reply Rate this

இது யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்து வாசித்த பாராட்டு பத்திரம் போலத்தான் உள்ளது இதில் எதார்த்தம் இல்லை

Reply Rate this
மே 18, 2026 11:05 am

ஆக ஒரு இயக்கமாக இருக்க வேண்டிய அரசியல் ஒரு கார்பொரேட் நிறுவனமாக மாறி விட்டது இனி இதில் லாபம் நட்டம் மட்டுமே வியூகம் மக்களாவது லட்சியமாவது அதே நேரம் இது ஒரு வெளி நாட்டு நிறுவனம் என்பதையும் மறந்து விட கூடாது எல்லாம் கெரகம்

Reply Rate this
மே 18, 2026 09:16 am

ஸ்டெர்லைட்( வேதாந்த) ஓனர் பாராட்டியுள்ளது சிறப்பான ஒன்று.

Reply Rate this