Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 முதல்வர் விஜய் கேரள பயணம் ரத்து; அடுத்த வாரம் டில்லி செல்கிறார்

 முதல்வர் விஜய் கேரள பயணம் ரத்து; அடுத்த வாரம் டில்லி செல்கிறார்

சென்னை: கேரள பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த முதல்வர் விஜய், தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

கேரளம் மாநிலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்., கட்சியை சேர்ந்த சதீசன், அம்மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவரது பதவி ஏற்பு விழா, திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

கேரளம், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தேசிய தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வரும், த.வெ.க., தலைவருமான விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, இன்று காலை தனி விமானத்தில், அவர் திருவனந்தபுரம் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், கேரளா பயணத்தை, முதல்வர் விஜய் திடீரென ரத்து செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் பதவியேற்ற பின், முதலில் டில்லி சென்று ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பது தான் மரபு என்பதால், கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் டில்லி செல்ல, விஜய் தயாராகி வருகிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பிரதமர் வெளிநாடு சென்று திரும்பிய பின் சந்திப்பு நடக்கவுள்ளது.

Advertisement

மே 18, 2026 01:30 pm

பதவியேற்ப்பு நிகழ்ச்சிக்கு சென்றிருக்கலாம் ..நம்பருக்கே சவால் விடற மாதிரி அந்த அதிகாரியின் மவுன புன்னகையை நேரில் கண்டிருக்கலாம்

Reply Rate this
மே 18, 2026 12:51 pm

எப்படியெல்லாம் சர்க்கஸ் காட்டவேண்டியுள்ளது, நேர்மை என்பது காணாமல் போனால் துன்பத்தை அனுபவித்தே ஆகவேண்டும்.

Reply Rate this
மே 18, 2026 11:51 am

கேரளா பயணம், ராகுலுக்கு நெருக்கம். டெல்லியில் பிரச்னையை உண்டாக்கும். கான்-கிராஸ் - முஸ்லீம் லீக் கூட்டணி கேரளாவில். இங்கே சனாதனத்தை அழிப்போம் என்ற TVK பேச்சு. டெல்லியிலே எப்படி நாடகம் ஆட முடியும்.

Reply Rate this
மே 18, 2026 11:34 am

மிரட்டல் பாலிடிக்ஸ் விஜயிடம் எடுபடாது.. ??தமிழகமும் ஏற்காது
தேவையில்லாமல் சீண்டினால் டெல்லிக்கே குறி வைக்க நேரிடும்
அமிட்ஷா புத்திசாலி அதனால் செல்வாக்கு உள்ளவர்களை பகைக்க மாட்டார்
நண்பராக்கி கொள்ள முயல்வார்

Reply Rate this
நீ திமுக சொம்பு தானே. இப்போ எப்படி...
மே 19, 2026 04:29 am
Rate this
மே 18, 2026 11:14 am

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட்களின் தோழமை

Reply Rate this
மே 18, 2026 10:44 am

தவறில்லை ....

Reply Rate this
மே 18, 2026 09:44 am

பயண ரத்து நல்லது. காங்கிரஸ் தானாக வந்து காலைச் சுற்றிய பாம்பு.

Reply Rate this
மே 18, 2026 09:27 am

சூப்பர் முதல்வர். ஆரவாரம் இல்லாத தெளிவான முதல்வர்

Reply Rate this
மே 18, 2026 09:04 am

சாருக்கு ஷா பயம். ஏற்கனவே ஸ்ட்ராங்கா 2 வரி ஏய்ப்பு கேஸ் இருக்கு.

Reply Rate this
மே 18, 2026 08:45 am

அப்பா தப்பிச்சோம்... இல்லைனா கேரளா அவுட்டோர் சூட்டிங், ரீல்ஸ், ஏஐ படம் போட்டு கொன்னுருப்பானுங்க..

Reply Rate this