Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


செல்வப்பெருந்தகையை நீக்க காங்., நிர்வாகிகள் போர்கொடி

செல்வப்பெருந்தகையை நீக்க காங்., நிர்வாகிகள் போர்கொடி

- நமது நிருபர் -

'தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும்' என, அக்கட்சியின் நிர்வாகிகள், 42 பேர் கையெழுத்திட்ட கடிதம், டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.ஜோதி, பொன்கிருஷ்ணமூர்த்தி, கே.விஜயன், தணிகாசலம், அருள் பெத்தையா, எஸ்.வி.ரமணி, ரங்கபாஷ்யம், திருச்சி வேலுச்சாமி, செங்கம் குமார் உட்பட, 42 பேர் எழுதியுள்ள கடிதம்:

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்து, அங்கீகாரத்திற்காக ஏங்கி நிற்கும் தொண்டர்களின் நம்பிக்கையை, இந்த தேர்தல் நிறைவேற்றும் என, எதிர்பார்த்தோம். ஆனால், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் தான் கிடைத்துள்ளனர். இதற்கு பொறுப்பு யார்? தமிழக அரசியல் நிலவரத்தை உண்மையாக எடுத்துரைக்கத் தவறியவர்களா அல்லது தி.மு.க., ஆதிக்கத்திற்குள் செயல்பட்டவர்களா?

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகள் என, த.வெ.க., தரப்பிலிருந்து அழைப்பு இருந்தபோதும், அந்த கூட்டணியை வேண்டாம் என, தலைமையிடம் வலியுறுத்தி, கட்சிக்குள்ளேயே மிரட்டல் அரசியல் செய்து, ஒரு நல்ல வாய்ப்பை முறியடித்தவர்கள் மீது, அகில இந்திய தலைமை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க., கூட்டணி பொருந்தா கூட்டணி என்பதை அறிந்திருந்த போதும், கட்சி கட்டளைக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டோம். த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால், 180 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். தேர்தல் முடிந்த பின் உண்மையை சொல்லாமல் இருப்பது கட்சிக்கே துரோகம் செய்வதாக இருக்கும் என்பதால், இந்த கூட்டறிக்கையை வெளியிடுகிறோம்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய அரசியல் வாய்ப்பை இழந்ததற்கு பொறுப்பு யார்; உண்மை நிலையை மறைத்து, தவறான தகவலை வழங்கியவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

ஜாதி, மதம், பணம் போன்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்ட புதிய தலைமையை, தமிழக காங்கிரசில் உடனே உருவாக்க வேண்டும். கூட்டணி அமைப்பதில் தோல்வி, தொகுதி கணக்கீட்டில் தோல்வி, உரிய இடங்களை பெறுவதில் தோல்வி கண்டதால், கட்சிக்கு உடனே சீர்திருத்தமும் நடவடிக்கையும் அவசியம். எனவே, தமிழக தலைமையை உடனே மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக தலைவர் மாற்றப்படுவார்
சட்டசபை தேர்தல் மூலம், மக்கள் மூன்று விதமான தீர்ப்பை அளித்துள்ளனர். த.வெ.க.,விற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்காவிடில், பா.ஜ., ஊடுருவி விடும். பா.ஜ., வரக்கூடாது என்பதே காங்கிரசின் நோக்கம். இதற்காகவே, தி.மு.க., உடன் கூட்டணி வைத்தோம். தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் மாற்றப்படுவார். த.வெ.க., -- காங்., கூட்டணி, 2029 லோக்சபா தேர்தலிலும் தொடரும்.
- சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,

Advertisement

மே 07, 2026 07:42 pm

செல்வ பெருந்தொகையை விட அதி முக்கிய பல தடவை காங்கிரசுக்கு குழி பறித்த சிதம்பரத்தை அல்லவா நீக்கனும்!!!!!!

Reply Rate this
மே 07, 2026 04:22 pm

அடிப்படை அரசியல் அறிவு இல்லாத, பல கொலை, கொள்ளை சேகர்பாபுடன் சேர்ந்து கலக்கி... இன்னும் தொடர்கிறார்

Reply Rate this
மே 07, 2026 02:08 pm

பிஜேபி உள்ள வந்துரும் ன்னு மிரட்டல் உடுறீங்க. சரி இந்தியா முழுவதும் மற்றும் 15 மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியில் உள்ளது.

Reply Rate this
மே 07, 2026 12:33 pm

overstaying .

Reply Rate this
மே 07, 2026 12:10 pm

இனிமேல் காங்கிரஸ் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன ?? அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே.

Reply Rate this
மே 07, 2026 10:34 am

1). மானாஸ்தன் இன்னேரம் பதவி விலகி இருக்க வேண்டும்.
2). கஷ்டப்படும் துப்புரவு தொழிலாளர்கள் வயற்றில் அடித்து ஊழல் செய்த கீழ்த்தரமான எண்ணகங்கள் கொண்ட மனிதர்.
3). சவுக்கு ஷங்கர் நல்வரா கெட்டவரா என்பதை விடுத்து அவர் வீட்டில் செய்த அசிங்கமான செயலை எந்த மனிதனும் செய்யமாட்டான். அவர் தாயும் இறந்து போய் விட்டார்.
4). ஆம்ஸ்ட்ராங் என்று பல விஷயங்களில் ஈடுபட்டவர்.
5). இந்த சாக்கடை மீது வழக்கு போட்டு உள்ளே வைக்காமல் ஸ்டாலின் தாத்தா பாதுகாத்து வந்தார் என்பது தான் வேதனையான விஷயம்.
6). நாற்றம் பிடித்த கேவலமான பிறவி

Reply Rate this
மே 07, 2026 10:08 am

இவன் திமுக வின் sleeper cell த வெ க வில் சதி செய்வான்

Reply Rate this
மே 07, 2026 07:12 am

காங்கிரஸ் முழுவதுமாக அழிவதற்கு கண்டிப்பாக இவர் மாநில தலைவராகவும் பப்பு தேசிய தலைவராகவும் நீடிக்கவேண்டும்.

Reply Rate this
மே 07, 2026 06:51 am

தலைவர் பதவியை தேர்தலுக்கு பிறகு அந்த பதவியிலிருந்து விலகப் போவதாக கூறியிருந்தாரே! என்னவாயிற்று?

Reply Rate this
இவரை இன்னுமா தலைவர் பதவியில் இருந்து நீக்கவில்லை.
வெரி பேட்.
மே 07, 2026 07:39 am
Rate this
முடிந்தால் தூக்கி பார் அப்டின்னு ராவுள் கிட்டே சவாலாக கூறிவிட்டாராம் பேசிகிறாங்க . மமதை பேகம் effect
மே 07, 2026 08:58 pm
Rate this