வாரிசு அரசியல் இமேஜை தகர்க்க நேருவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி?
திருச்சி: தி.மு.க.,வில் வாரிசு அரசியல் என்ற இமேஜை தகர்க்கும் வகையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை, முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வழங்க கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, தி.மு.க., தோல்வி அடைந்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக முதல்வர் ஸ்டாலினே, கொளத்துார் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும், தி.மு.க., 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
ஸ்டாலின் இல்லாத நிலையில், உதயநிதியே எதிர்க்கட்சி தலைவராகலாம் என, தகவல்கள் பரவி வருகின்றனர்.
ஆனால், நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க.,வின் வாரிசு அரசியல் குறித்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக பேசி பிரசாரம் செய்தன. தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், 14 அமைச்சர்களும் தோல்வி அடைய இதுவும் ஒரு காரணம். இந்த சூழலில், தி.மு.க.,வின் மீதுள்ள வாரிசு அரசியல் என்ற இமேஜை தகர்க்க, தி.மு.க., தலைமை ஆலோசித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கட்சியின் மூத்த நிர்வாகியான, முன்னாள் அமைச்சர் நேருவை எதிர்க்கட்சி தலைவராக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், கடைசி நேரத்தில் இதில் மாற்றங்கள் நிகழவும் வாய்ப்பு உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்