Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ராகுலுடன் சந்திப்பு

 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ராகுலுடன் சந்திப்பு

- நமது டில்லி நிருபர் -
''முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் நிச்சயம் இடம்பெறும்,'' என, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரும், டில்லியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சந்திப்பு குறித்து, கிரீஷ் ஷோடங்கர் கூறியதாவது;

தமிழக காங்., - எம்.எல்.ஏ.,க்களிடம் 'கடின மாக உழைக்க வேண்டும்' என மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.

கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த, இதுதான் சரியான நேரம் என்று ராகுலும் அறிவுறுத்தியுள்ளார். தேவையற்ற பிரச்னைகளில் ஈடுபடாமல், கவனத்துடன் இருக்குமாறும் எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் அரசின் அமைச்சரவையில் இடம் பெற, காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதி.

காங்கிரசுக்கு எத்தனை அமைச்சர்கள், என்னென்ன இலாகா என்பது குறித்து இரு தரப்பும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

எங்கள் தரப்பு எதிர்பார்ப்பு உள்ளிட்ட விபரங்களை, த.வெ.க., தலைவர்களிடமும், முதல்வர் விஜயிடமும் பகிர்ந்துள்ளோம்; முதல்வர் இறுதி முடிவு எடுப்பார். எதுவாக இருந்தாலும், தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கண்டிப்பாக இடம் பெறும். இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement