என்னை கொல்ல சதி: அ.தி.மு.க., 'மாஜி' புகார்
கரூர்: ''என்னை கொலை செய்ய, சதி செய்கின்றனர்,'' என, கரூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கடந்த 2021 தேர்தலில் நான் பிரசாரம் செய்தபோது, மர்ம நபர்கள் என்னை கொலை செய்யும் எண்ணத்தில் பின்தொடர்ந்தனர். அவர்கள், கரூரை சேர்ந்த தி.மு.க., புள்ளிகளுடன் போட்டோ எடுத்துள்ளனர். இது குறித்து, புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன், வேடசந்துாரில் என் கார் மீது ஆசிட் வீசப்பட்டது. விவசாயிகள் பிரச்னைக்காக, கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் கொடுத்த போதும், தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர். என்னையும் தாக்க முயன்றனர்.
தற்போது, இந்த தேர்தலில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை மற்றும் மாநில டி.ஜி.பி., அலுவலகத்துக்கு புகார் அளித்துள்ளோம்.
என் உயிருக்கோ, என் குடும்பத்தினருக்கோ ஆபத்து ஏற்பட்டால், தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் தான் பொறுப்பு. கரூரில் தேர்தலை நிறுத்த, தி.மு.க.,வினர் சதி செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்