ரூ.8,000 கூப்பன் கொடுத்த தி.மு.க., - எம்.பி.,யால் சர்ச்சை
வாழப்பாடி: ஏற்காடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி பகுதியில், 8,000 ரூபாய் கூப்பன் கொடுத்த தி.மு.க., - எம்.பி.,யால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து பகுதியில், நேற்று முன்தினம் இரவு, ஏற்காடு சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரேவதிக்கு ஆதரவாக, கள்ளக்குறிச்சி தி.மு.க., -- எம்.பி., மலையரசன், வீடு வீடாக மக்களை சந்தித்து, ஓட்டு கேட்டார். தி.மு.க., வாழப்பாடி நகர செயலர் செல்வம் உடன் இருந்தார்.
அப்போது, ஒவ்வொரு வீட்டிலும், 8,000 ரூபாய் கூப்பனை வாக்காளர்களிடம், எம்.பி., மலையரசன் வழங்கி, 'வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன், இந்த கூப்பனை பயன்படுத்தி நீங்கள், 8,000 ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்' என தெரிவித்தார்.
தற்போது, அனைத்து வீடுகளிலும், தி.மு.க.,வினர் போலி கூப்பன் கொடுத்து வரும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்