Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'சிறுபான்மையின மக்களுக்கு உழைக்க தி.மு.க., காத்துக்கொண்டு இருக்கிறது'

 'சிறுபான்மையின மக்களுக்கு உழைக்க தி.மு.க., காத்துக்கொண்டு இருக்கிறது'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: “சிறுபான்மையின மக்கள், எப்போதும் போல தி.மு.க.,வுக்கு துணையாக இருக்க வேண்டும்,” என, துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி வெள்ளி விழா மாநாட்டில், உதயநிதி பேசியதாவது:
தி.மு.க.,வுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பந்தம், கருணாநிதி, காயிதே மில்லத் காலத்தில் இருந்து உருவானது.

கருணாநிதி வழியில், முஸ்லிம்களை தனது உறவாக முதல்வர் ஸ்டாலின் கருதுகிறார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று, என் அரசியல் வாழ்வில் முதன் முதலாக கைதானேன்.
சிறுபான்மையின மாணவர்கள் படிக்கக் கூடாது என்பதுதான் பா.ஜ., அரசின் எண்ணம். அதனால்தான், சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியுள்ளனர்.

இந்த அநீதியை எதிர்த்த முதல்வர் ஸ்டாலின், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் ஒரு லட்சம் சிறுபான்மையின மாணவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கடந்த லோக்சபா தேர்தலின்போது, 'எக்காலத்திலும், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க மாட்டோம்' என்றார். இப்போது கூட்டணி வைத்துள்ளார்.

சிறுபான்மையினருக்காக உழைக்க, தி.மு.க.,வும் தி.மு.க., அரசும் காத்துக் கொண்டிருக்கிறது. எனவே, சிறுபான்மையின மக்கள் எப்போதும் போல தி.மு.க.,வுக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement