Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தி.மு.க., ஸ்டிக்கர் கம்பெனி: பா.ஜ., குஷ்பு கிண்டல்

 தி.மு.க., ஸ்டிக்கர் கம்பெனி: பா.ஜ., குஷ்பு கிண்டல்

கோவை: ''மத்திய அரசின் திட்டங்களை காப்பி, பேஸ்ட் செய்து தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டுகிறது,'' என்று குஷ்பு கிண்டலடித்துள்ளார்.

கோவை வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதியை ஆதரித்து, அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் குஷ்பு, வெங்கிட்டாபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கோவையின் மகள் வானதி. நான் கோவையின் மருமகள். எம்.ஜி.ஆர்., -- ஜெயலலிதா இருந்தபோது தமிழகம் முன்னேற்றமடைந்தது. பழனிசாமி முதல்வராக இருந்தபோது நமக்கு பாதுகாப்பு இருந்தது. தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் செல்வதற்கே பயப்படுகின்றனர்; கையில் 'பெப்பர் ஸ்ப்ரே'வுடன் செல்கின்றனர்.

பெண் குழந்தைகள் வீடு திரும்பும் வரை, வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. தி.மு.க.,வினர் பெண்களை அடிமையாகத்தான் நடத்துவர். தி.மு.க., அமைச்சர்கள், பெண்களை தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர். தே.ஜ.கூட்டணி வெற்றி பெற்றால் தான் நல்ல திட்டங்கள் உங்கள் வீடு தேடிவரும்.

தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள அனைத்தும் மத்திய அரசு கொடுத்த திட்டங்கள் தான். தி.மு.க., அவற்றில் ஸ்டிக்கரை ஒட்டி கொடுப்பர். தி.மு.க., ஒரு 'ஸ்டிக்கர்' கம்பெனி. சொந்தமாக யோசிக்க மாட்டார்கள். மத்திய அரசின் திட்டங்களை 'காப்பி பேஸ்ட்' செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement