திருக்கோவிலுார் பகுதியில் அனல் பறந்த தி.மு.க., இறுதி கட்ட பிரசாரம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதியில் தி.மு.க., சார்பில் இறுதி கட்ட பிரசாரம் முகையூர் உள்ளிட்ட இடங்களில் நடந்தது.
திருக்கோவிலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
பிரசாரத்தின் நிறைவு நாளான நேற்று திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட முகையூரில் வி.சி.க., தலைவர் திருமாவளவன், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவே கவுதம சிகாமணிக்கு ஆதர அளியுங்கள் என பேசினார். இதேபோல் திருக்கோவிலுார் ஐந்து முனை சந்திப்பில் பொன்முடி எம்.எல்.ஏ., தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி ஆகியோர் கவுதம சிகாமணியை ஆதரித்து இறுதி கட்டப் பிரசாரம் செய்து உரையாற்றினர்.
கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் நேற்று காலையில் துவங்கி மாலை 6:00 மணி வரை தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு திருக்கோவிலுார் மற்றும் முகையூரில் நிறைவு செய்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்