தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி பிரசாரம் நிறைவு செய்த வி.சி., வேட்பாளர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வி.சி., வேட்பாளர் மாலதி, கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக சென்று தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை நிறைவு செய்தார்.
கள்ளக்குறிச்சி தொகுதி வி.சி., வேட்பாளர் மாலதி, நேற்று இறுதி கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். நீலமங்கலம் சாமியார் மடத்தில் இருந்து தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் காங்., மாவட்ட தலைவர் இதயதுல்லா, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன், வி.சி., மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தியாகதுருகம் சாலை, கச்சேரி சாலை வழியாக ஊர்வலமாக சென்றார்.
அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சேலம் சாலை வழியாக ஊர்வலமாக சென்று ஏமப்பேர் பைபாஸ் சாலை சந்திப்பில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரசாரத்தை நிறைவு செய்தார்.
இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மூக்கப்பன், மணிமாறன், சண்முகம், தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, பெங்களூர் புகழேந்தி, நகர செயலாளர் சுப்ராயலு, முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு, நகர நிர்வாகி பாபு, மாவட்ட துணை செயலாளர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் சத்தியமூர்த்தி, நெடுஞ்செழியன், அண்ணாதுரை உட்பட தி.மு.க., வி.சி., காங்., உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்