Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஓட்டு எண்ணும்போது சிரிக்க கூடாது: தேர்தல் அலுவலர்களுக்கு அட்வைஸ்

ஓட்டு எண்ணும்போது சிரிக்க கூடாது: தேர்தல் அலுவலர்களுக்கு அட்வைஸ்

கோவை: ஓட்டும் எண்ணும் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்கள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறவுள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும் தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி. கல்லூரியில் ஓட்டுகள் எண்ணப்படும். இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள ஒவ்வொரு அலுவலரும் காலை முதல் மாலை வரை பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சியில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் கிரியப்பனர் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் எங்கும் சோதனை ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை. அதனால் கணக்கீட்டில் எந்த பிரச்னையும் வராது. ஓட்டு விபரங்களை எழுதும்போது எந்த பிழையும் இருக்கக் கூடாது.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஆவணங்களில் ஏஜென்ட்களிடம் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஓட்டு எண்ணிக்கையில் ஏஜென்ட்கள் ஏதாவது ஆட்சேபனை செய்தால் விதிகள்படி தான் செயல்படுகிறோம் என்று அவர்களிடம் கையெழுத்து வாங்கியதை காட்டலாம்.

அங்கு வேறு ஏதாவது பிரச்னை எழுந்தால் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும். ஓட்டுப்பதிவின்போதே கோவையில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அதேபோல ஓட்டு எண்ணிக்கை பணியையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், இயந்திரத்தில் பட்டன் எதையாவது மாற்றி அமுக்கி விட்டோம் என்று பயந்துவிட வேண்டாம். உங்கள் முக பாவனை தான் முக்கியம். ஓட்டு எண்ணும் பணியில் சிரிப்பது, கோபப்படுவது, பதற்றப்படுவது போன்ற எந்த உணர்ச்சியும் அன்றைக்கு இருக்கக் கூடாது. பணியை முடித்தோமா வந்தோமா என்று இருக்கணும்.

எதுவுமே நடக்காதது போல் இருந்தால் சமாளித்து வெளியில் வந்துவிடலாம். ஏஜென்ட் யாராவது தெரிந்தவர் என்று கைக்காண்பித்தால் உங்கள் கதையுடன், தொகுதி தேர்தல் அலுவலரின் கதையும் முடிந்துவிடும். அங்கு உங்களின் உணர்ச்சியை வெளிப்படு த்தக் கூடாது, என்றார்.

கோவை தெற்கில் கூடுதல் கவனம்


பிரசாரம், ஓட்டுப்பதிவின்போதே கோவை தெற்கு தொகுதி அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. ஓட்டு எண்ணிக்கையின் போதும் கோவை தெற்கு தொகுதியில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தெற்கு தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை கீழ் தளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவான மின்னணு இயந்திரங்கள் முதல் தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன்தான், அடுத்த சுற்றுக்கான இயந்திரங்கள் மேலே இருந்து எடுத்து வரப்படும். இதைப்பற்றி அங்குள்ள ஏஜென்ட்கள், அங்குள்ள பணியாளர்களுக்கு தெளிவாக விளக்கி சலசலப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மே 01, 2026 01:03 pm

மனிதனின் அடையாளம் சிரிப்பு.

Reply Rate this
மே 01, 2026 01:02 pm

கருத்து கணிப்பு முடிவு தி.மு.க விற்கு
சாதகம். விஜய் தன்னை ஒரு அழிவு சக்தி எனவும், தமிழின thuரோகியெனவும், சுயநல வாதி எனவும் ப்ரோவ் செய்த
உள்ளார்.அவரது கேரக்டர் nallathaiviru.bathaver..

Reply Rate this
மே 01, 2026 12:59 pm

கொல்லைப்பக்கம் போயிட்டு வரலாமா ????

Reply Rate this
மே 01, 2026 12:11 pm

தேர்தல் அலுவலர்களுக்கு முகமூடியைக் கொடுத்துவிடலாமே

Reply Rate this
மே 01, 2026 11:53 am

அப்படியென்றால் அழுவதைத் தடுக்கவில்லை.தீயமுக வுக்கு வரும் ஓட்டுகளைப் பார்த்து ,அதற்கு ஓட்டுப்.போட்டவர்களை நினைத்து அழுது விடுங்கள்.

Reply Rate this
மே 01, 2026 08:39 am

அது தான் முன் கணிப்பு என்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஊரெல்லாம் சிரிப்பாய் சிரிக்குதே! முழு முடிவுகள் தெரிந்த உடன் அழுகை நிச்சயம்!

Reply Rate this
மே 01, 2026 08:35 am

சரி கொட்டாவி தும்மல் விக்கல் வாந்தி வந்தா என்ன செய்ய வேண்டும்?

Reply Rate this
மே 01, 2026 07:36 am

எப்படிங்க அது முடியும் சாத்தியப்படுமா? திராவிட மாடல் 2.0 ன்னு சொல்லிட்டு கனவு கண்டுகொண்டிருக்கும் ஸ்டாலினை நினைக்கும்போது எப்படிங்க ஒட்டு எண்ணிக்கையின்போது சிரிக்காமல் இருக்க முடியும். எதுக்கும் ஒரு லிமிட் இருக்குங்க ..என்னால இந்த செய்தியை படிக்கும்போதே சிரிப்பை அடக்க முடியல . பாவம் ஒட்டு எண்ணிக்கையின்போது அவர்களின் பாடு திட்டடம்தான்

Reply Rate this
Premanathan S - Cuddalore
பழநிசாமீ சேகர் தான் அழப்போகிறார் அப்படியே ஒரு அழும் வீடியோவும் போட்டால் மிகவும் ரசிப்போம்
மே 01, 2026 10:19 am
Rate this
மே 01, 2026 07:29 am

இப்படி meeting நடந்ததை public ஆக புதுவையில் செய்தி வெளியிட்டா agent கள் face reaction வச்சு ஓட்டு எண்ணும் அதிகாரங்களை பிரச்சினை பண்ண மாட்டாங்களா

Reply Rate this