Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஓட்டுக்களை வீணாக்காதீர்கள்; விஜய் ரசிகர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்

 ஓட்டுக்களை வீணாக்காதீர்கள்; விஜய் ரசிகர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்

கடலூர்: விஜயின் ஆதரவாளர்கள் உங்களது ஓட்டுக்களை வீணாக்காதீர்கள். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூரில் நிருபர்களிடம் அன்புமணி கூறியதாவது:
விஜய் அரசியலுக்கு வந்து இருக்கிறார். ஒரு குறுகிய காலம் தான். இந்த தேர்தலில் விஜயின் ஆதரவாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் வைக்கிறேன். விஜய் கட்சியை தொடங்கியதற்கு காரணமே, ''திமுகவை எதிர்க்க வேண்டும்; திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்'' என்பதற்கே. எங்கள் நோக்கமும் திமுகவை அகற்ற வேண்டும். விஜய் இந்த தேர்தலில் ஓரளவுக்கு ஓட்டுக்கள் வாங்குவார்; ஆனால், வெற்றி பெற முடியாது. அதனால் விஜயின் ஆதரவாளர்கள் உங்களது ஓட்டுக்களை வீணாக்காதீர்கள்.
விஜயின் ஆதரவாளர்கள் எங்களுக்கு ஓட்டளியுங்கள். எங்கள் ஓட்டளித்தால் உறுதியாக தி.மு.க தோல்வி அடையும். உங்களது நோக்கம் திமுக தோற்க வேண்டும். உங்களால் வெற்றி பெற முடியாது. ஓட்டுக்கள் பெறுவீர்கள், ஆனால் வெற்றி பெற முடியாது. அப்போது நீங்கள் உங்களது ஓட்டுக்களை வீணாக்காமல் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டளித்தால், உங்களது நோக்கம், திமுக அகற்றப்பட வேண்டும், அது நடக்கும். விஜயின் ரசிகர்களை ஒன்றும் செய்ய முடியாது, அவர்கள் விஜய்க்கு தான் ஓட்டுப்போட போகிறார்கள்.

நான் விஜயின் ஆதரவாளர்களை சொல்கிறேன். உங்களது நோக்கம் நிறைவேற்றப்படும் வேண்டும் என்றால், உங்களது ஓட்டுக்களை வீணாக்காதீர்கள், உங்களது ஓட்டுக்களை அதிமுக கூட்டணிக்கு போடுங்கள், அதன் மூலமாக உறுதியாக திமுக ஆட்சி அகற்றப்படும், உங்களது நோக்கம் வெற்றி பெறும். எல்லாருடைய ஓட்டுக்களும் வேண்டும். 200 தொகுதிகளிக்கு மேல் வெற்றி பெற வேண்டும். பெண்கள், விஜய் ஆதரவாளர்கள் ஓட்டுக்கள் வாங்க வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது, அது தான் எங்களது நோக்கம். இவ்வாறு அன்புமணி கூறினார்.

Advertisement