டாக்டர் செங்கோட்டுவேலுக்கு வாழ்நாள் கவுரவ விருது
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேலுக்கு, வாழ்நாள் கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு, இதய சிகிச்சையில் புதிய நுட்பங்களை கையாண்டு வருகிறார்.
இதய மருத்துவத்தின் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், ஜெ.சி.எஸ்., என்ற ஜப்பானிஸ் சர்குலேசன் சங்கத்தின் இதய பிரிவின் வாழ்நாள் கவுரவ விருது, செங்கோட்டுவேலுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது.
இந்த கவுரவம், இதய மருத்துவத்தின் மேம்பட்ட மருத்துவ திறன்கள், கல்விசார் சிறப்பு மற்றும் இதயவியல் துறையில் தலைமைத்துவம் ஆகியவற்றின் குறிப்பிட்ட பங்களிப்பை பாராட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
உலகளவில் இதய சிகிச்சை துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்களுக்கு மட்டுமே இதுபோன்ற கவுரவம் வழங்கப்படுகிறது.
அதன்படி, சென்னையை சேர்ந்த டாக்டர் செங்கோட்டுவேலு, உலகளாவிய வாழ்நாள் கவுரவ விருதை பெற்றுள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்