சமூக வலைதளபிரசாரங்களை தடுக்க முடியாமல் திணறிய தேர்தல் கமிஷன்
சென்னை: ஓட்டுப்பதிவு முடியும் வரை, அரசியல் கட்சிகள் செய்த, 'ஆன்லைன்' பிரசாரத்தை, தேர்தல் கமிஷனால் தடுக்க முடியவில்லை.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் மார்ச் 15ம் தேதி வெளியிட்டது. அன்று முதலே, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகளின் பிரசாரம், ஏப்., 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஓய்ந்தது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அதன்பின் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது. ஆனால், ஓட்டுப் பதிவு முடியும் வரை, சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்து வந்தன.
இதுகுறித்து, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது: மேலோட்டமாக பார்த்தால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, தேர்தல் கமிஷனுக்குதான் எல்லா அதிகாரமும் இருப்பதுபோல் தெரியும். ஆனால், அது உண்மையல்ல. குறிப்பாக, சமூக வலைதளங்களில் செய்யப்படும் பிரசாரங்களை கவனித்து, நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷனுக்கு போதிய ஊழியர்கள் இல்லை.
கமிஷனுக்கு புகார் வரும்பட்சத்தில், அதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் செய்தவர்களுக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்.
ஆனால், சமூக வலைதளங்களில், அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பிரசாரங்கள் செய்யப்படுவதில்லை. அதிகாரப்பூர்வமற்ற வகையில், அரசியல் கட்சிகளின் அனுதாபிகளால் செய்யப்படும் பிரசாரங்களை தடுப்பது சுலபமில்லை. லட்சக்கணக்கான பதிவுகளை ஆராய்ந்து, அவை தேர்தல் விதிகளை மீறியிருக்கிறதா என்று விசாரணை மேற்கொள்ள, குறைந்தது ஒரு ஆண்டாகி விடும்.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசு பொறுப்பேற்கும் வரைதான், கமிஷனுக்கு அதிகாரமே இருக்கும். இதனால், சமூக வலைதளங்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது முடியாத காரியம்.
எனவேதான், பிரசாரம் ஓய்ந்த பின்னும், சமூக வலைதளங்களில் மேற்கொள்ளும் பிரசாரத்தை தடுக்க முடியாமல், தேர்தல் கமிஷன் திணறுகிறது. இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்திய அளவில் தேர்தல் கமிஷன் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னைதான். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
Advertisement
சமூக வலைத்தள பிரச்சாரங்களைப் பார்த்து முடிவெடுப்பவர்கள் மிகவும் குறைவு .....
We need some more TN Seshans in EC to discipline political parties. The present EC is toothless paper tiger only in the midst powerful political parties.
பிறகு எப்படி திமுக, அதிமுக தேர்தல் அன்றும் முழு பக்க பத்திரிக்கை விளம்பரங்கள் தர அனுமதித்தீர் ஆபிசர் சார்?
எங்க பாத்தாலும் ஸ்டாலின் தொடரட்டும், அடுத்து நல்லாட்சின்னா எடப்பாடியார் விளம்பரங்கள்தான். இவிங்க கொக்கையடிச்சி வெச்சிருந்த காசெல்லாம் கூகுள் சாப்புட்டான்.
21-ஏப்ரல்-2026 மாலை ஆறு மணி முதல், எந்தவித பிரசாரத்திற்கும் அனுமதி கிடையாது என்ற தேர்தல் கட்டுப்பாடு, டிஜிட்டல் சமூக வலைதள பிரசாரம் உள்ளிட்ட அனைத்து விதமான பிரசாரத்துக்கும் பொருந்தும். 21-ஏப்ரல்-2026 மாலை ஆறு மணி முதல் 23-ஏப்ரல்-2026 மாலை 7 மணி வரை, சமூக வலைத்தளங்களை தடை செய்யக் கூடிய அளவிற்கு, இந்திய அளவில், GREAT FIREWALL SYSTEM தேவை. இந்தியாவில், இணையதள சேவை வழங்கும், அனைத்து நிறுவனங்களுக்கும், மேற்கண்ட சமூகவலைத்தளங்கள், VPN மூலம் கூட பயன்படுத்த முடியாதபடி செய்யலாம். மேலும், மத்திய அரசாங்கமே, முக்கியமான சூழலில் மட்டும், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் படியாக, தொழில்நுட்ப ரீதியாக BLOCK SWITCH வைத்திருக்க வேண்டும். அது, போர் காலங்களில், அந்நிய நாட்டினர் மற்றும் அவற்றின் கைக்கூலிகள், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, ஒரு தரப்பு மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடக் கூடிய செயலை தடுத்து நிறுத்தும். பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக, சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்றியது நினைவிருக்கலாம். அதற்க்கு பின்னால், பிற நாடுகளில் மூக்கை நுழைக்கும், ஒரு குறிப்பிட்ட வெளிநாடு இருந்தது என்று மேற்கண்ட நாடுகள் குற்றம் சாட்டியிருந்ததும், நினைவிருக்கலாம். இது போன்று நடக்க வாய்ப்புண்டு, என்று முன்கூட்டியே கணித்த சீனா Great Firewall System அமல்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலும் இது போன்ற கட்டுப்பாடு உண்டு. ஐரோப்பிய ஒன்றியம், சமூக வலைத்தளங்களை வரைமுறைப் படுத்த அருமையான சட்டங்களை இயற்றியுள்ளது. அவ்வளவு ஏன், வரும் 2027-ஆம் ஆண்டு முதல், அனைத்து, மொபைல் தயாரிப்பாளர்களும், Google Play Store and Apple App Store மட்டுமல்லாது, மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர் அனுமதிக்க வேண்டுமென்றும், எளிதில் கழட்டி மாட்டக்கூடிய பேட்டரி உடன் கூடிய மொபைல் மட்டும் விற்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. நமது அரசாங்கம், சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சட்டத்தை அப்படியே, காப்பி செய்து நம் நாட்டுக்கு ஏற்றார் போல், சிறிய மாற்றங்களை செய்து நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும்.
என்னத்த தேர்தல்... தேர்தல் கமிஷன்னுட்டு... வந்து வந்து பாத்து, மிரட்டல் விடுவதோடு சரி... இதுல எல்லோருக்கும் லீவு வேற உட்டு... நேத்திக்கி கனமுகூர்த்தம். ஆட்டிக்காரங்க கேக்கறதுதான் கட்டணம். இந்தியாவின் டிசைனே இப்பிடி ஏமாத்தறதுதான்.

தேர்தல் வருவதற்கு முன்பே டிவி சானல்களில் அரசு செலவில், அரசு சார்பில் முறைகேடாக விளம்பரம் கொடுத்தது திமுக அரசு ...... அதாவது கட்சி சின்னம் இல்லாமல், கட்சி பெயரைச் சொல்லாமல், சாதனைகள் தொடரட்டும் என்று விளம்பரம் கொடுத்தது ....