Advertisement
1. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்ததலில் இலைக் கட்சி தலைவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாம். அதை கொண்டாடும்விதமாக, சொந்த ஊரில் உள்ள கோவிலுக்கு தன்னுடைய குடும்பத்தினரை, பேசி முடித்த மறுநாள் அனுப்பி வைத்து சிறப்பு பூஜைகள் செய்ய வைத்தாராம். அப்போது, அங்கு ஒருவருக்கு சாமி வந்து, அருள் வாக்கு சொல்ல, அதுவும் தனக்கு பாசிட்டிவ்வாக இருப்பதால், தலைவர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.
2. சுமுகமாக கூட்டணி கட்சிகளோடு பேசி முடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பீயூஸான மனிதர், கடைசியாக கட்சி அலுவலகம் வந்தபோது, அடிக்கடி கட்சி பக்கம் எட்டிப் பார்க்காத தலைகளெல்லாம் அட்டெனென்ஸ் போட காத்திருந்ததாம். ஒவ்வொருவரையும் பார்த்த அந்த மனிதர், என்ன தேர்தல் நேரம் என்பதால், கட்சி பக்கம் எட்டிப் பார்க்கிறீர்களா? என பளிச்சென்று கேட்க, பலருடைய முகங்களும் பியூஸ் போனது போல் ஆகி விட்டதாம்.
4. கடந்த முறை 'மைக்' எடுத்து பேசி, ஊரெல்லாம் பிரசாரத்தில் ஈடுபட்ட அந்த சிங்கக் குரல் நடிகர் தலைவர், இப்போது விவசாயியோடு விவசாயியாக ஏர் கலைப்பையோடு தேர்தலை நோக்கி கிளம்பி இருக்கிறார். அவருக்கு கட்சி நிதி என்று எதுவும் இல்லாததால், தேர்தலை எப்படி எதிர்கொள்வது என புரியாமல் தட்டு தடுமாறுகிறாராம். பிரசார வேன் துவக்கத்திலேயே மக்கர் செய்ய, நண்பர்கள் யாராவது பிரசார வேன் கொடுத்து உதவ மாட்டார்களா என காத்திருக்கிறாராம்.
5. கட்சியை கலைக்காத குறையாக, கடந்த தேர்தலின் போதே சூரிய கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்த 'கண்ணே கலைமானே' நடிகர், அதற்கு தேவையானதை ராஜ்யசபா தேர்தலின் போதே பெற்று விட்டார். ஆனாலும், வரும் தேர்தலுக்கும் கட்சி சார்பில் போட்டியிட ஐவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனச் சொல்லி, ஐந்து விரல்களை சூரிய கட்சியை நோக்கி கை நீட்ட, 'நீங்க செஞ்ச உதவிகளுக்கு நிறைய செஞ்சாச்சு; ரெண்டு போதும்' என சொல்லி மூன்று விரல்களை மடக்கி விட்டனராம்.
6. கடந்த முறை தாமரை கட்சியில் சென்னையின் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பூ நடிகைக்கு, இப்போதும் தேர்தலில் போட்டிபோட ஆசையாம். ஆனால், போட்டி கடுமையாக இருப்பதால், தனக்கு இம்முறையும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என முடிவெடுத்து ஒதுங்கி இருந்தாராம். அவருடைய கணவரோ, அரசியலில் ஒதுங்கக் கூடாது என சொல்லி அம்மணியை முடுக்கிவிட, சென்னையின் பிரதான தொகுதியில் சீட் கேட்டு மல்லுகட்டுகிறாராம்.
3. அறம்தாங்கியூரில் தொடர்ச்சியாக தானும் தன் மகனும் வென்று கொண்டிருக்கும் தொகுதியை இந்த முறை சூரிய கட்சியினர் எடுத்துக் கொள்ள முயல, கை கட்சியின் அரசர் கடும் கோபம் அடைந்துள்ளாராம். கடந்த லோக்சபா தேர்தலின்போது, மலைக்கோட்டை தொகுதியை தன்னிடம் இருந்து பறித்ததோடு, இப்போது என் மகனையும் தொகுதி இல்லாமல் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனரே என்று சொல்லி, சூரிய கட்சி தலைமையை நோக்கி கொந்தளிக்கிறாராம்.
டில்லியில் அரசியல்வாதிகள் தொடர்பான செய்தி சேகரிப்பது என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். தமிழகத்திலோ அல்லது
சென்னை: தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அத்தனை தொகுதிகள்
திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணியில் யாருக்கு சீட்டு என்ற
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அத்தனை தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும்
கூட்டணியில் திமுகவுக்கு அடுத்து, நாங்கள் தான் பெரிய கட்சி எனக்கூறி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு,
புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார் என்பதில் காங்கிரஸ்- திமுக இடையே கடும் மோதல் நிலவி
சென்னையின் தாம்பரத்தை ஒட்டிய வரம் தொகுதியில் ஜனநாயகம் கட்சி சார்பில் போட்டியிடும் பெருமாள் நபர், போகும்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுத்தை கட்சி போராடி பெற்ற தொகுதியில், செல்வனானவரை வேட்பாளர் ஆக்கினார் தலைவர்....
கங்கை மாவட்டத்தின் மாமதுரை தொகுதியில், சூரிய கட்சி சார்பில் போட்டியிடும் அரசியானவர், 'வெற்றி பெற்றால்,...
@block_B@ தாமதத்தால் எரிச்சல் 1. கை கட்சியின் தேசிய முன்னாள் தலைவரை, தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்துக்காக...
போக்கும் வரத்துமாக இருக்கும் அமைச்சரவை பிரதிநிதி, கடந்த ஐந்தாண்டு காலமாகவே தன் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட...
பூட்டு ஊரில் இலை கட்சி சார்பில் போட்டியிடும் வாசனானவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று,...
மாம்பழ கட்சியின் அப்பா தலைவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கியதும், மாம்பழத்து ஊரில் உள்ள தனியார்...
தாமரை கட்சியின் முன்னாள் தலைவரான மலையானவர், கட்சித் தலைமை தனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற...
கேப்டனானவர் முதன்முதலில் போட்டியிட்ட சலம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று சொல்லி, அவருடைய மனைவி...
தன்னை யாரும் பின்தொடருவரோ என்ற அச்சம் ஏதும் இன்றி தைரியமாகவும் சுதந்திரமாகவும் வெளியே தெருவில் சென்று...
வாசகர்கள் கருத்துகள்