Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஐந்து சவரன், ரூ.1 லட்சம்: ஓ.பி.எஸ்., பரிசு மழை

 ஐந்து சவரன், ரூ.1 லட்சம்: ஓ.பி.எஸ்., பரிசு மழை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அ .தி.மு.க.,வில் முதல்வர் பதவி வரை வகித்த பன்னீர்செல்வம், சமீபத்தில், தி.மு.க.,வுக்கு தாவி, தேனி மாவட்டம் போடி தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார். ஏற்கனவே, இதே தொகுதியில் மூன்று முறை அ.தி.மு.க.,வில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வம், இந்த முறை தி.மு.க.,வில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, தி.மு.க.,வினருக்கு பரிசு மழை திட்டத்தை அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, தேர்தல் பணி செய்யும் கிளை செயலர்களுக்கு தலா 10,000 ரூபாய்; பூத் கமிட்டியினருக்கு தலா 5,000 ரூபாய் என 'கவனிப்பு' நடக்கிறது. இந்நிலையில், மேல சொக்கநாதபுரம், சங்கராபுரத்தில் நடந்த தி.மு.க., பூத் கமிட்டி கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது அவர் அறிவித்த பரிசு மழையால், தி.மு.க.,வினர் 'குஷி'யாகி உள்ளனர்.

கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், “போடி தொகுதியில் நகர மற்றும் ஒன்றிய ஓட்டுச்சாவடிகளில், தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டுகளை பெற்றுத்தரும் பூத் கமிட்டி பொறுப்பாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

“அ.தி.மு.க., வேட்பாளரை விட கூடுதல் ஓட்டு பெற்று தந்தால் கூடுதல் பரிசும் தரப்படும். பூத் கமிட்டிகளை ஒருங்கிணைத்து, அ.தி.மு.க.,வை விட அதிக ஓட்டுகளை பெற்று தரும் நகர, ஒன்றிய செயலருக்கு ஐந்து சவரன் தங்க பதக்கம் பரிசாக வழங்கப்படும்,” என அறிவித்தார்.

Advertisement

ஏப் 19, 2026 09:14 am

இவரை எல்லாம் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுக்க மாட்டாங்க நடுத்தர வர்க்கம் கடன் வாங்கி வீடு வாங்கினால் நோட்டீஸ் அனுப்பும் நல்ல உள்ளம் கொண்டவங்க

Reply Rate this
ஏப் 13, 2026 10:09 pm

எவ்வளவு குறுக்கு அனுபவம் ,அதை வெளியில் கொண்டு வர ஒரு தேர்தல் பரிட்சை..

Reply Rate this
ஏப் 13, 2026 01:43 pm

வருமானவரித்துறை மாநிலத்தின் அதிகாரத்திற்கு மாற்ற வேண்டும்

Reply Rate this
ஏப் 13, 2026 11:08 am

ஐந்து கிலோ, ஒரு கோடி என அடுச்சுவுடுவியா, அத விட்டுப்புட்டு ஐந்து சவரன், ரூ.1 லட்சம் என பிச்சைக்காரத்தனமா....

Reply Rate this
ஏப் 13, 2026 10:41 am

இறந்து போய்விட்ட ஒரு மனுஷனுக்கு 20 வருடங்களுக்குப் பிறகு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புகிறது 2000 ரூபாய் நிலுவை என்று ஆனால் இந்த மாதிரி ஊழல் முதலைகளை கண்டுக்கவே மாட்டார்கள் அதுதான் மானங்கெட்ட வருமான வரித்துறை

Reply Rate this
ஏப் 13, 2026 09:42 am

, பணியாளர்கள் கணக்கில் ஒரு ஆயிரம் ரூபாய் அதிக வருமானம் வந்தால் ஆயிரம் கேள்விகள் கேட்டு அலைக்கழிக்கும் வருமாந்துறை இவற்றையெல்லாம் கவனிக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது?

Reply Rate this
ஏப் 13, 2026 09:39 am

அம்மாவை ஏமாற்றி ரத்தம் கோடிகளை சம்பாதித்து உங்களுடைய அத்தனை சொத்து சொத்துக்களும் நாசமாக போகும்

Reply Rate this
ஏப் 13, 2026 08:08 am

புதிய வானம் புதிய பூமி எங்கும் பணமழை பெய்யுதா.

Reply Rate this
ஏப் 13, 2026 06:23 am

பன்னீர் அழுவது போல் இருக்கும் புகைப்படம் காணோமே.

Reply Rate this
Arul. K - Hougang
நானும் இதை எதிர்பார்த்தேன்
ஏப் 13, 2026 08:14 am
Rate this
ஏப் 13, 2026 05:11 am

இத் தொகுதியில் தங்களுக்கான வாய்ப்பை எங்கிருந்தோ வந்த பன்னீர் திடீரென தட்டிப் பறித்ததால் உள்ளூர் தி.மு.கவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். உள்ளூர் தி.மு.க நிர்வாகிகளின் ஒத்துழைப்பு சுத்தமாக இவருக்கு கிடைக்கவில்லை.
அ.தி.மு.க மேலிடம் இவரை தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அ.தி.மு.கவில் இருந்த போது இவர் அழிக்க நினைத்த தங்க தமிழ்ச் செல்வன் இவருக்கு எதிரான மனநிலையில் உள்ளார்.இம் முறை தான் எம்.பி.யாக இருந்தாலும் அடுத்த முறை ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் தனக்கு போட்டியாக வந்து விடுவார் என்பது அவரது கணக்கு.தான் தேறுவது கஷ்டம் என்பதை அண்ணன் உணர்ந்து கொண்டதால் பரிசு மற்றும் தொகை கொடுக்கும் முடிவுக்கு அண்ணன் வந்துள்ளார். உள்ளூர் விபரப் படி மனுஷன் ஆடிப் போயுள்ளார்.

Reply Rate this