Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 நான் தான் 'ரியல் பிக்பாஸ்' கெத்து காண்பிக்கும் சீமான்

 நான் தான் 'ரியல் பிக்பாஸ்' கெத்து காண்பிக்கும் சீமான்

'எ ன் வழி தனி வழி' என்பது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ, நாம் தமிழர் கட்சிக்கு அமர்க்களமாக பொருந்துகிறது. எப்போதும் தனியாகத்தான் வருவேன் என்று 'கெத்து' காண்பித்து, பிரசாரம் மேற்கொண்டு வருகிறார், ஒருங்கிணைப்பாளர் சீமான்.

காரமடையில் இவர் பேசிய பேச்சு, கைத்தட்டலை அதிகமாக பெற்றது. அதிலிருந்து சில...

* தமிழக அரசுக்கு 10.50 லட்சம் கோடி கடன் உள்ளது. இப்படி இருக்க, மகளிர் உரிமை தொகை ரூ.5,000 வழங்கியது ஏன்?. உங்கள் வாக்குகளை உறுதி செய்ய இப்படி அரசு பணத்தை செலவு செய்துள்ளீர்கள். இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.

* ஏமாற்றுபவன் யாரு, காப்பாத்துறவன் யாரு என உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களை யாரும் காப்பாற்ற முடியாது.

* சாதி பார்த்தால் எனக்கு ஓட்டு போடாத, சாதிக்க துடிப்பவன் என நினைத்தால், எனக்கு ஓட்டு போடு.

* இலவசங்களை என் ஆட்சியில் அழிப்பேன். கல்வி மாநில அரசின் உரிமை. கல்வி கொடுக்க வேண்டியது அரசு உரிமை.

* 'பிரிஜ்' இலவசமாக தருவேன் என சொல்கிறார்கள். அதில் வைக்கக்கூடிய காய்கறியை யார் தருவார். விவசாயி தான் தர வேண்டும். எனவே, விவசாய சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.

* நான் 'ரியல் பிக்பாஸ்'. தமிழகத்தை கண்காணிப்பு கேமராக்களால் நிறைத்து கண்காணிப்பேன். ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.

* கூட்டணிக்கு சென்றதால், அண்ணன் விஜயகாந்த், வைகோ போன்றவர்கள், தங்களது செல்வாக்கை இழந்தார்கள். வாக்கு வங்கி சரிந்தது. தனித்து நிற்பதால், என் மக்கள் என்னை நம்புகிறார்கள்.

மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் கலாமணி, நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.--

Advertisement