Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தம்பி விஜயை விமர்சிக்க மாட்டேன்: குஷ்பு 'திடீர்' பாசம்

 தம்பி விஜயை விமர்சிக்க மாட்டேன்: குஷ்பு 'திடீர்' பாசம்

மதுரை: மதுரை மத்தி தொகுதியில், தே.ஜ., கூட்டணியில், புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சினிமா இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். இவர் நேற்று, தன் மனைவியும் தமிழக பா.ஜ., துணைத்தலைவருமான நடிகை குஷ்புவுடன் சென்று, வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது, குஷ்பு அளித்த பேட்டி:

என் கணவர், என் அரசியல் வாழ்க்கையில் பின்புலமாக இருந்தவர். தற்போது, நேரடி அரசியலில் களம் காண்கிறார். அவரை வெளியூர்காரர் என்று சொல்ல முடியாது.

இனி, மதுரையில் வீடு வாங்கி, இங்கு தான் இருப்பார். எதிலும், 100 சதவீதம் வெற்றி பெற முடியும் என்றால் தான், அவர் களம் இறங்குவார். அப்படித்தான், தேர்தலிலும் களம் இறங்குகிறார்.

எதிர்தரப்பில் அமைச்சர் தியாகராஜன் போட்டியிடுகிறார். பாரம்பரியம், குடும்ப அரசியல்வாதி என்பதற்காக மக்கள் ஓட்டு போடும் காலம் போய்விட்டது.

ஏற்கனவே, த.வெ.க., தலைவர் தம்பி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். அரசியல் களத்தில், தம்பி விஜயை நான் விமர்சிக்க மாட்டேன். அவரால், அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு என சொல்ல முடியாது. தமிழகத்தில் தி.மு.க-.,வுடன் இருப்பதால் தான் காங்கிரஸ் இருப்பதே தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

ஏப் 05, 2026 02:18 pm

அய்யய்யோ ,, வயசு தெரிஞ்சிருச்சே , , , ,விஜய்க்கே அறுபது நெருங்கி விட்டது ?

Reply Rate this
ஏப் 05, 2026 09:42 am

ஒண்ணும் கெட்டு போயிடாது . பாலும் ,தேனும் ஆறாக ஓடும் .

Reply Rate this