பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமி ஆக்குங்க: உதயநிதி ‛'ரைமிங்'
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கையில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகியோரை ஆதரித்து, சிங்கம்புணரி, சிவகங்கையில் பிரச்சாரம் செய்து துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
எதிர்க்கட்சி தலைவராக உள்ள பழனிசாமி, இந்தியாவின் நம்பர் ஒன் முரட்டு அடிமை. பிரதமர் மோடியின் அடிமைதான், பழனிசாமி. பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
மத்திய அரசு, தமிழகத்திற்கான கல்வி நிதியை தரவில்லை. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை.
ஆனால், தேர்தல் அறிவித்ததும் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகம் வருகின்றனர். அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும் வாய்ப்பு தான் இந்த தேர்தல். எனவேதான், இந்த சட்டசபை தேர்தல், டில்லிக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் தேர்தல் என திரும்பத் திரும்ப சொல்கிறோம்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்